Actor Vijay: அட்ரா சக்க... தளபதி பட வாய்ப்பை தட்டி தூக்கிய அட்லீ!! மீண்டும் இணையும் மாஸ் காம்போ!!
இயக்குனர் அட்லீ 'ராஜா ராணி' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை வரிசையாக இயக்கி மாஸ் காட்டிய நிலையில், தற்போது மீண்டும் விஜய் - அட்லீ காம்போ இணைய உள்ளது குறித்து சூப்பர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் முன்னணி இயக்குநரகளில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவர், இயக்குனராக அறிமுகமான 'ராஜா ராணி' திரைப்படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படம் சாயலில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே... ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாருடன் கூட்டணி அமைப்பார், யாரை வைத்து படம் இயக்குவார்? என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படமும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து மெர்சல், பிகில், என தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து இயக்கி மாஸ் காட்டினார். தளபதி விஜய்யை வைத்து, இயக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என பெரிய இயக்குனர்கள் வரை ஏங்கி வரும் நிலையில் இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் ஜாக்பாட்டாகவே பார்க்கப்பட்டது.
தற்போது, தமிழை தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
பூனேவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஷாருகான் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டதால் திடீர் என நிறுத்தப்பட்டது. எனவே மீண்டும் படப்பிடிப்பை துவங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போது தளபதி விஜய் தன்னுடைய 65 ஆவது படமான, 'பீஸ்ட்' படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், 66 ஆவது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஆனால் விஜய் தன்னுடைய 67 ஆவது படத்தை யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், 68 ஆவது படத்தை அட்லீ இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நான்காவது முறையாக அட்லீ - விஜய் காம்போ இணைய உள்ள நிலையில் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் விஜய் பிஸியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு துவங்க உள்ளதாம். இந்த மாஸ் தகவல் தற்போது விஜய் ரசிகர்களை உச்சாக படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.