MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொறுத்ததெல்லாம் போதும்... இனி காத்திருக்க முடியாது! அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராகும் வைகை புயல் வடிவேலு!

பொறுத்ததெல்லாம் போதும்... இனி காத்திருக்க முடியாது! அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராகும் வைகை புயல் வடிவேலு!

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கடந்த சில வருடங்களாக கண்டு ரசிக்கப்பட்டு வரும், வைகைப் புயல் வடிவேலு... தற்போது அதிரடி முடிவு எடுத்து... விரைவில் தன்னுடைய நடிப்பை வேறு லெவலில் துவங்க தயாராகி வருகிறாராம்.  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 04 2021, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.

36

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். இதிலே இவர் தான் நடிக்க ஒத்துழைப்பு தர  மறுக்கிறார் என்றது, 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படக்குழு.

46

இவரை பற்றிய சர்ச்சைகள் நீண்டு கொண்டே இருக்க, விரைவில் அனைத்து பிரச்சனைகளும் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டு, மீனும் வடிவேலு நடிக்க தயாராகி வருவதாகவும், சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

56

ஆனால் தற்போது வரை, இவர் நடிக்க உள்ள படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே இனி பொறுத்ததெல்லாம் போதும் என முடிவு செய்துள்ள வடிவேலு ரசிகர்களுக்காக அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம். 

66

திரைப்படங்களை தொடர்ந்து சில ஓடிடி தளத்திற்காக வெப் தொடரில் நடிக்க கேட்டு கொண்டதால், பல முன்னணி பிரபலங்கள் அடுத்தடுத்து ஓடிடி தொடரின் நடிக்க ஆர்வம் காட்டி வருவது போல், இவரும் ஓடிடி வெப் சீரிஸில் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved