'எனக்கு வந்த துன்பம் போல் யாருக்கும் வர கூடாது'... அனைவலையும் கலங்க வைத்த வடிவேலு..!
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிக்க உள்ள படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட வடிவேலு, மிகவும் உருக்கமாக பேசி அனைவரையுமே கலங்க வைத்துவிட்டார்.
1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? என்று ஏங்கி வந்த ரசிகர்களின் ஏக்கங்களை தீர்க்க தற்போது மீண்டும் தன்னுடைய நடிப்பு அவதாரத்தை எடுத்துள்ளார்.
இவரை ரசிகர்கள் இந்த அளவிற்கு ரசிக்க காரணம், நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.
கடந்த 10 ஆண்டுகள் இவரது போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பதே அபூர்வமாக இருந்தாலும், அப்படி இவர் நடித்த படங்களும் பெரிதாக இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் ஓவ்வொரு நாளும் மீம்ஸ் நாயகனாக வலம் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகள் இவரது போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பதே அபூர்வமாக இருந்தாலும், அப்படி இவர் நடித்த படங்களும் பெரிதாக இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் ஓவ்வொரு நாளும் மீம்ஸ் நாயகனாக வலம் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.
இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு மிகவும் உணர்வு பூர்வமாக பேசி அங்கிருந்தவர்களையே கலங்க செய்து விட்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'என் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட துன்பம் வேறு யாரும் ஏற்படக்கூடாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது. கொரோனோ காலகட்டத்தில் என்னுடைய காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக சென்றுவிட்டது என கூறினார்.
முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்று வருவதாகவும், இனி எல்லாமே நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. என் நண்பர் விவேக்கின் மரணம் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு, அவரது இடத்தையும் சேர்த்து நிரப்பவேண்டிய கடமை தனக்கு உள்ளதாக தெரிவித்த வடிவேலு, இனி வரும் காலங்களில் ஷங்கர் இயக்கத்திலோ, அல்லது ஷங்கர் தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.