நிலவில் சொந்தமாக நிலம் வாங்கிய சுஷாந்த்...! சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
திறமையும் அழகும் நிறைந்த, பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஏற்படுத்திய சோகம் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்நிலையில் இவர் பற்றி பல தகவல் வெளியாகி வரும் நிலையில், நிலவில் சுஷாந்த் சிங் சொந்தமாக இடம் வாங்கி வைத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்துள்ள Chhichhore படம் தற்கொலைக்கு எதிராக போராடி வெல்வது பற்றியது. இப்படிப்பட்ட படத்தில் நடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுன் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சுஷாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அது தெரிந்த பாலிவுட் பிரபலங்கள் சிலரும் அவருடன் அமர்ந்து பேசி தீர்க்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையின் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கி, தற்போது முன்னணி பாலிவுட் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த Pavitra Rishta சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த அங்கிதா லோகண்டே என்பவரை 6 வருடம் உருகி உருகி காதலித்து வந்த சுஷாந்த் சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டும் பிரிந்தார்.

சேதன் பகத்தின் நாவலை மையமாக உருவாக்கப்பட்ட, Kai Po Che படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மையில் கல்லாக அமைந்தது. எம்.எஸ்.தோனியாகவே வாழ்ந்து நடித்திருந்தார்.

சொத்து சுகம் இருந்தும், பாசத்திற்கு ஏங்கி... மன அழுத்தத்தால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க கூடும் என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், சுஷாந்தின் தாய் மாமா அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் பூமியில் மட்டும் இன்றி, நிலவிலும் அவருக்கு சொந்தமாக ஒரு நிலத்தை வாங்கி வைதுள்ளத்துள்ளாராம். சுஷாந்த் சிங் ராஜ்புட் சொத்து மற்றும் பிற தகவல்கள் பற்றி ஏபிபி லைவ் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளதாவது, சுஷாந்த் சிங் ரூ .59 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளதாகவும், ஒரு படத்திற்கு ரூ .5-7 கோடி சம்பள வாங்கி வருகிறார்.

மேலும் பி.எம்.டபிள்யூ BMW K 1300 R motorcycle, Land Rover Range Rover SUV மற்றும் Maserati Quattroporte ஆகிய சொகுசு வாகனங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.