வேஷ்டி சட்டையில்... கையில் துப்பாக்கியுடன் வெறித்தனம்..! சூர்யா வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகர் சூர்யா, மார்ச் 15 ஆன் தேதி முதல் 'சூர்யா 40 ' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகர் சூர்யா, மார்ச் 15 ஆன் தேதி முதல் 'சூர்யா 40 ' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் நடித்து தயாரித்திருந்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் 'சூரரை போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், தரமான 100 படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இறுதிவரை செல்லாமல் வெளியேறியது சூர்யா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் சூர்யா அடுத்தடுத்து 'வாடிவாசல்', பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40வது படத்தில் பிஸியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கடந்த மாதம் 9 ஆம் தேதி கூறியிருந்தார்.
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள சூர்யா, சமீபத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று முதல் சூர்யா தன்னுடைய 40 படமான பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில், வெறித்தனமாக புகைப்படம் ஒன்றை கொடுத்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தில், சூர்யாவின் உருவம் நிழல் போல் தெரிகிறது... வேஷ்டி சட்டையில் வெறித்தனமாக கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார். இந்த புகைப்படத்தை சூர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.