அடேங்கப்பா? விமானநிலையங்களில் முக்கிய கான்ட்ராக்டை கைப்பற்றி பல கோடி லாபம் பார்க்கும் சூர்யா!
நடிகர் சூர்யா, நடிப்பு - தயாரிப்பை தாண்டி தொழிலதிபராகவும், கோடி கணக்கில் சம்பாதித்து வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமாகி, பல வருட போராட்டங்களுக்கு பின் ஒரு நடிகராக ஜெயித்தவர் நடிகர் சூர்யா. இன்று இவர் முன்னணி ஹீரோவாக உள்ளார் என்றால் அதற்க்கு பின்னர் அவர் பட்ட பல வலிகளும் உள்ளது. அதையெல்லாம் கடந்து தான் இன்று தேசிய விருது நடிகராக உயர்ந்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை என்றாலும், தற்போது சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடிவாசல்', சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள சூர்யா 42 ஆகிய படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாகவே உள்ளது.
மேலும் செய்திகள்: ஆண்டி ஆனாலும் அடங்காத மீரா ஜாஸ்மின்..! 40 வயதில் டாப் ஆங்கிள் போஸில்... மூட் அவுட் செய்த போட்டோஸ்!
Image: Suriya/Instagram
நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்து தரமான படங்களை தயாரித்து வருகின்றனர் சூர்யா - ஜோதிகா தம்பதி. அந்த வகையில், இவர்கள் தயாரிப்பில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்னர் வெளியான 'விருமன்' திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களுடன், வசூல் சாதனை செய்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, நடிகர் சூர்யா நடிப்பு - தயாரிப்பை தான் தொழிலதிபராகவும் பல கோடிகளை சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளாராம்.
மேலும் செய்திகள்: 'கபாலி' படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன்! முதல் முறையாக பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்!
இதை தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையத்தில் உள்ள 2 வீலர் மற்றும் 4 வீலர் பார்க்கிங் காட்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்துள்ளாராம். இதன்முலம், சூர்யாவிற்கு பல கோடி லாபம் கிடைத்து வருவதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.