MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya 41 : அதெல்லாம் படத்துல இருக்கவே கூடாது... இயக்குனர் பாலாவுக்கு சூர்யா போட்ட 2 கண்டிஷன்

Suriya 41 : அதெல்லாம் படத்துல இருக்கவே கூடாது... இயக்குனர் பாலாவுக்கு சூர்யா போட்ட 2 கண்டிஷன்

Suriya 41 : பாலா இயக்கத்தில் ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் சூர்யா நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 05 2022, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இயக்குனரான பாண்டிராஜ் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து இருந்தார்.

24

இதையடுத்து இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சூர்யா. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஏற்கனவே பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாலுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

34

தற்காலிகமாக சூர்யா 41 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

44

இந்நிலையில், இப்படத்தில் சில மாற்றங்களை செய்யச்சொல்லி இயக்குனர் பாலாவுக்கு நடிகர் சூர்யா கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் வன்முறை காட்சிகள் இருக்ககூடாது என்றும், அதேபோல் தவறான வார்த்தைகள் படத்தில் இடம்பெறக் கூடாது என்றும் நடிகர் சூர்யா சொல்லிவிட்டாராம். இந்த கண்டிஷனுக்கு பாலாவும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... Nithya Balaji :கமல் ரொம்ப வொர்ஸ்ட்.. அவர மாதிரி மோசமானவரை நான் பார்த்ததில்லை- தாடி பாலாஜி மனைவி நித்யா காட்டம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி. வி. பிரகாஷ் குமார்
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 கிலோ தங்கத்தில் ஜொலித்த ராஷ்மிகா! ரகசியத்தை உடைக்கும் ரூ.20 கோடி பட்ஜெட்!
Recommended image2
த்ரிஷா உடன் ஜோடிபோட்டு வந்த விஜய்... கடுமையாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி
Recommended image3
Trisha Collections: அழகு தேவதை திரிஷாவின் கலெக்ஷன்ஸ்.! மலைக்க வைக்கும் கார்கள் மற்றும் வீடுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved