இளம் ஹீரோவை போல் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மகன்! ஒரே நாளில் பிறந்த அப்பா - மகனின் பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்
நடிகர் ஸ்ரீகாந்தின் ஸ்ரீகாந்த் மற்றும் அவரின் மகன் அகில் இருவரும் ஒரே நாளில், தங்களின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இளம் ஹீரோவை போல் இருக்கும் ஸ்ரீகாந்தின் மகன், லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு சில நடிகர் நடிகைகளை பார்த்து... ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கேட்க்கும் கேள்விகளில் ஒன்று உங்களுக்கு வயசே ஆகாதா என்பது தான். அந்த லிஸ்டில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த்.
இயக்குனர் சசி இயக்கத்தில் அறிமுகமான 'ரோஜா' கூட்டம் படத்தில் பார்த்தது போலவே, இளமை பொங்கும் ஹீரோவாக இருந்து வருகிறார். அதே போல் இவருடைய மனைவி வந்தனாவுக்கு, திருமணத்தின் போது எப்படி இருந்தாரோ... அப்படிதான் இரண்டு குழந்தைகளை பெற்றபின்பும் இருக்கிறார்.
முதல்வர் என்பதால் முந்திக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த், அவரின் மனைவி வந்தனா ஆகியோர் மகளுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடியபோது, எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டது.
குறிப்பாக இவர்களின் மகள் அஹானா மளமளவென வளர்ந்து விட்டதாக கூறி இருந்தனர். இதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் மற்றும் வருடைய மகன் அகில் இருவரும் ஒரே நாளில் தங்களின் பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, வந்தனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
23 வயது சீரியல் நடிகையின் அம்மாவுக்கு குழந்தை பிறந்தது..! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!
அதில் மிகவும் சிறுவனாக பார்க்கப்பட்ட அகில் தற்போது தன்னுடைய அப்பாவின் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறார். பார்ப்பதற்கு இளம் ஹீரோவை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அப்பாவை தொடர்ந்து, அகிலும் நடிக்க வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.