MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Soori : முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி; நடிகர் சூரிக்கு அடித்த ஜாக்பாட்!

Soori : முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி; நடிகர் சூரிக்கு அடித்த ஜாக்பாட்!

நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அப்படத்திற்காக அவர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 26 2025, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Soori Next Movie
Image Credit : X

Soori Next Movie

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி இன்று பிசியான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் சூரி. காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரியை, தான் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக்கினார் வெற்றிமாறன். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சூரிக்கு ஹீரோ வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அதை ஏற்று இதுவரை அவர் ஹீரோவாக நடித்த கருடன், கொட்டுக்காளி, மாமன் என அனைத்துப் படங்களுமே வெற்றியடைந்து உள்ளன. இதனால் கோலிவுட்டில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூரி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி
Image Credit : X

ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி

அவர் நடிப்பில் அடுத்ததாக மண்டாடி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி உள்ளார். இப்படம் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சூரி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தான் மாண்டாடி திரைப்படத்தையும் தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

34
லோகேஷ் படத்தில் சூரி
Image Credit : X

லோகேஷ் படத்தில் சூரி

மண்டாடி படத்தை தொடர்ந்து நடிகர் சூரிக்கு ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி அவருடைய நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தை மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த இயக்குனரான லிஜோ ஜோஸ் பெலிசேரி தான் இயக்க உள்ளாராம். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ்
Image Credit : our own

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கடந்த ஆண்டு வெளிவந்த ஃபைட் கிளப் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து அவர் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தான் அவர் சூரி நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளாராம். பென்ஸ் படம் முடிந்ததும் சூரி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூரி (நடிகர்)
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
90களில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள்... திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
Recommended image3
Indian 3 : வெயிட்டிங் லிஸ்டில் இருந்த இந்தியன் 3... மீண்டும் தூசிதட்டி எடுத்த ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Related Stories
Recommended image1
சந்தானத்தை பின்னுக்குத் தள்ளிய சூரி? இத்தனை கோடி சம்பளமா?
Recommended image2
Now Playing
முதலில் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் ரசிகர்களுக்கு நடிகர் சூரி அட்வைஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved