- Home
- Cinema
- அப்பா பிறந்த நாளில் சூரி மகன், மகள் அடித்த லூட்டி... பர்த்டே கேக்கில் என்ன எழுதியிருக்காங்க பாருங்க...!
அப்பா பிறந்த நாளில் சூரி மகன், மகள் அடித்த லூட்டி... பர்த்டே கேக்கில் என்ன எழுதியிருக்காங்க பாருங்க...!
நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குழந்தைகள் தயார் செய்திருந்த பிறந்த நாள் கேக்கில் இடம் பெற்ற வாசகங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக சிக்ஸ் பேக் வைத்த நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறி இருப்பவர் நடிகர் சூரி, கடந்த 27ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

சூரிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறினர். ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பில் உருகி போன சூரி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், உங்கள் அன்பு எனும் வாழ்த்து மழையால் என்னை முழுவதும் நனையவைத்து என் பிறந்த நாளை சிறந்த நாளாய் மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த நன்றிகள். என் பிறந்தநாளுக்கு நன்றி தெரிவித்த பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நற்பணி மன்றம் சார்பில் பல மாவட்டங்களில் குருதிக்கொடை கொடுத்தும் அன்னதானங்கள் வழங்கியும், இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்.

மரக்கன்றுகளை நட்டும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கிய என் உடன் பிறவா சகோதரர்களாகிய ரசிகர்கள் உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

சிறப்பாக செயல்பட்ட அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும், ரசிகர்களை வழி நடத்தும் நற்பணி மன்ற தலைவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

சூரிக்கு வெண்ணிலா என்ற மகளும், ஷ்ரவன் என்ற மகனும் உள்ளனர். தற்போது லாக்டவுனால் ஷூட்டிங் இல்லாத காரணத்தால் வீட்டில் இருக்கும் சூரி மகன், மகள்களுடன் தான் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சூரியின் பிள்ளைகள் அவருக்கு ஏற்பாடு செய்திருந்த வித்தியாசமான கேக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், “கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெகரேஷன் செலவு 2000, மொத்தம் 4000. மொத காசை எடுத்து வெச்சிட்டு கேக்கை வெட்டு” என எழுதியிருக்கிறார்கள்.

அந்த போட்டோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சூரி, 400ருவா கேக்க கொடுத்துபுட்டு, 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்... தேங்க்யூ கட்டிபெத்தார்களா .... என பதிவிட்டுள்ளார்.

இப்படி மீம்ஸ் போட்டு சூரி ரசிகர்கள் அந்த ட்வீட்டை செல்லமாக கலாய்த்து வருகின்றனர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.