“வில்லனா நடிச்சாலும் நீங்க கிரேட் சார்”... ஏழைகளுக்கு உதவுவதற்காக யாரும் செய்யாத காரியத்தை செய்த சோனு சூட்...!
First Published Dec 10, 2020, 9:21 AM IST
ஏழைகளுக்கு அடுத்தடுத்து உதவுவதற்காக ரியல் ஹீரோ சோனு சூட் மேற்கொண்டுள்ள காரியம் சாமானியர்கள் முறை கோடிகளில் புரளும் சூப்பர் ஸ்டார்கள் வரை வாய்பிளக்க வைத்துள்ளது.

கொரோனா பொது முடக்க காலத்தில் இருந்து தற்போது வரை ஏழை, எளிய மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னால் ஆன பல்வேறு உதவிகளை ‘இல்லை’ என்று மறுக்காமல் இன்முகத்துடன் செய்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, பஸ், பிளைட் போன்றவற்றை ஏற்பாடு கொடுத்தார். அதே போல் உணவின்றி கஷ்டப்பட்டு வந்த பலருக்கு சாப்பாடு கொடுத்தும் உதவினார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?