பிறந்த குழந்தை உயிரை காப்பாற்றிய சோனு சூட்..! அவர் பெயரையே மகனுக்கு சூட்டிய தாய்..!
பிரபல நடிகர் குறைமாதத்தில் பிறந்து, ஆபத்தான நிலையில் இருந்த நிலையில், அந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகரின் பெயரையே தன்னுடைய மகனுக்கு வைத்து நெகிழவைத்துள்ளார் அந்த தாய்.
கொரோனா பிரச்சனை தலை தூக்கிய போது தான் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்டின் உண்மையான உன்னத குணமும் வெளிவந்தது.
மற்ற பிரபலங்கள் போல் கடமைக்கு தன்னால் முடிந்த தொகையை, மக்களின் நலனுக்கு வழங்கி விட்டு நகர்ந்து விடாமல், சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலர்... அவர்களது சொந்த ஊருக்கு செல்ல உதவினார்.
பஸ், ரயில் போன்றவை செல்ல முடியாத இடங்களுக்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து மக்களை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
சொத்தை அடமாமனம் வைத்து கூட செய்த இவரது உதவிகளுக்கு மக்கள் பலர் தங்களுடைய அன்பை பொழிந்த நிலையில், இது தன்னுடைய கடமை என்று, கஷ்டப்பட்டு வரும் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை தற்போது வரை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஆந்திராவில் இவருக்கு கோவில் கட்டி ரசிகர்கள் பூஜித்து வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் ஆபத்தான நிலையில் உள்ளது தனக்கு உதவும் படி வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
அந்த பெண்ணின் நிலையை புரிந்து கொண்ட சோனு சூட், அந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு தான் பேசி விட்டதாகவும், நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த குழந்தையின் மருத்துவ செலவையும் அவரே ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த குழந்தை பூரண நலம் பெற்றுள்ளது. இதனை அடுத்து அந்தத் தாய் தனது டுவிட்டரில் சோனு சூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டதோடு, தனது மகனுக்கு ’சோனு’ என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அவருடைய உதவியால்தான் தன்னுடைய குழந்தை பிழைத்துள்ளதாகவும் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.