விஜய்யின் வாரிசு படத்திற்கு பாட்டு பாட சிம்பு கேட்ட சம்பளம் எவ்வளவு? வெளியான ஆச்சர்ய தகவல்
விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறும் தீ தளபதி பாடலை பாடவும், அதில் நடனமாடவும் நடிகர் சிம்பு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்த பின்னர் சினிமாவில் படு பிசியாகிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதைத் தொடர்ந்து அவர் கைவசம் பத்து தல திரைப்படம் உள்ளது. சிம்பு கேங்ஸ்டராக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகிறது.
நடிகர் சிம்பு பன்முகத்திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது பாடல்களையும் பாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்திற்காக தீ தளபதி பாடலை பாடி இருந்தார் சிம்பு. தமன் இசையமைப்பில் அவர் பாடிய இப்பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.
இப்பாடலின் கூடுதல் சிறப்பு என்றால் அது சிம்புவின் நடனம் தான். பாடியதோடு மட்டுமின்றி இப்பாடலுக்காக எடுக்கப்பட்ட புரோமோ வீடியோவில் சிம்பு வெறித்தனமாக நடனமாடி அசத்தி இருந்தார். நடிகர் விஜய் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக இப்பாடலை உருவாக்கி வெளியிட்டு இருந்தனர்.
இதையும் படியுங்கள்... 2022 எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக தோல்வியடைந்த திரைப்படங்கள்!
இந்நிலையில், தீ தளபதி பாடலை பாடவும், அதில் நடனமாடவும் நடிகர் சிம்பு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்கிற ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. தமன் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதாலும், விஜய் மீது வைத்திருக்கும் நன்மதிப்பின் காரணமாகவும், சிம்பு சம்பளமே வாங்காமல் இப்பாடலை பாடிக்கொடுத்தாராம்.
தீ தளபதி பாடலை ஒன்றரை மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்துவிட்டார்களாம். அதேபோல் அந்த புரோமோ வீடியோவையும் 6 மணிநேரத்தில் படமாக்கிவிட்டார்களாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போதும் சக நடிகரின் படத்துக்காக சிம்பு சம்பளமே வாங்காமல் பணியாற்றியதை அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பொங்கலுக்கு 'வாரிசு' படத்துடன் 'துணிவு' மோதுவது குறித்து விஜய் சொன்னது என்ன ? பிரபல நடிகர் கூறிய தகவல்!