MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • santhanam new movie :அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் ‘மாஸ்டர்’ பட பிரபலம்

santhanam new movie :அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் ‘மாஸ்டர்’ பட பிரபலம்

santhanam new movie : ஏஜண்ட் கண்ணாயிரம், மண்ணவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள சந்தானம், அடுத்ததாக மாஸ்டர் பட பிரபலத்துடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 16 2022, 06:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபலமாக்கிய லொல்லு சபா

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சந்தானம். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன நடிகர் சிம்பு தனது படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். அந்த வகையில், காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

25

பிசியான காமெடியன்

நாளடைவில் தமிழ் சினிமாவின் பிசியான காமெடியனாக உருவெடுத்தார் சந்தானம். குறுகிய காலத்தில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். தமிழ் சினிமாவில் இவரது காமெடிக்கென ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன.

35

ஹீரோவாக உயர்ந்த சந்தானம்

இதையடுத்து படிப்படியாக படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம், ஹீரோவாக அவதாரம் எடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார்.

45

மாஸ்டர் பிரபலத்துடன் கூட்டணி

தற்போது இவர் கைவசம் ஏஜண்ட் கண்ணாயிரம், மண்ணவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் ரத்னகுமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். வைபவ்வின் மேயாத மான், அமலா பால நடித்த ஆடை போன்ற படங்களை இயக்கியுள்ள ரத்ன குமார், விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் போன்ற படங்களுக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

55

டைட்டில் லுக் இன்று ரிலீஸ்

சந்தானம் - ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குனர்கள் கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன், வெங்கட் பிரபு ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Premgi as villain : என்னங்க சொல்றீங்க பிரேம்ஜி வில்லனா?... அதுவும் இந்த நடிகருக்கா! என்ன கொடுமை சார் இது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சந்தானம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved