- Home
- Cinema
- #BREAKING மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகனுக்கு கொரோனா... அறிகுறிகளே இன்றி ராம் சரணுக்கு தொற்று உறுதி...!
#BREAKING மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகனுக்கு கொரோனா... அறிகுறிகளே இன்றி ராம் சரணுக்கு தொற்று உறுதி...!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகளான நிஹாரிகா - சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் டூ கோலிவுட் வரை கொரோனா தொற்றால் அடுத்தடுத்து நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனில் ஆரம்பித்தது நடிகை தமன்னா வரை பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

கொரோனா கோர தாண்டவத்தின் உச்சமாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டு பிரிந்தார். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி. கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி காலமானார்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்கும் முன்பு நடிகர் சிரஞ்சீவி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் இரு தினங்களுக்குப் பிறகு தனக்கு தொற்று இல்லை என்றும், பரிசோதனை முடிவுகள் தவறாக வந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது நடிகர் ராம் சரணுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று பாசிட்டி என்றும், எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு உறுதியாக வெளியே வருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்சரணுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் விரைவில் நலம் பெற வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

தனக்கு கொரோனா தொற்று பாசிட்டி என்றும், எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு உறுதியாக வெளியே வருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்சரணுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் விரைவில் நலம் பெற வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகளான நிஹாரிகா - சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகளான நிஹாரிகா - சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.