MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிப்பா இருந்தாலும் மனசாட்சி வேண்டாமா? சொந்த தங்கைக்கே காதலனாக நடித்த பிரபல நடிகர்?

நடிப்பா இருந்தாலும் மனசாட்சி வேண்டாமா? சொந்த தங்கைக்கே காதலனாக நடித்த பிரபல நடிகர்?

நடிகர் ராதாரவி தன்னுடைய சொந்த தங்கையும், தன்னுடைய தந்தையின் 5-ஆவது மனைவியின் மகளுமான ராதிகாவை காதலிப்பது போல் ஒரு படத்தில் நடித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2 Min read
manimegalai a
Published : Sep 12 2024, 04:51 PM IST| Updated : Sep 12 2024, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
MR Radha Son Radharavi

MR Radha Son Radharavi

மூத்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன், என்கிற அடையாளத்துடன் கன்னட திரை உலகில் நடிக்க துவங்கி பின்னர் கமலஹாசனின் சிபாரிசால்  1976 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'மன்மத லீலை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராதாரவி, தன்னுடைய திரை அனுபவம் மற்றும் அரசியல் அனுபவம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

26
Radha Ravi Acting Carrier:

Radha Ravi Acting Carrier:

'மன்மத லீலை' படத்தில் ராதாரவியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, வீட்டுக்காரி, ருத்ர தாண்டவம், திருக்கல்யாணம், சரணம் ஐயப்பா, தண்ணீர் தண்ணீர், உயிருள்ளவரை உஷா, சிவப்பு சூரியன், சூரைக்கோட்டை சிங்கக்குட்டி, பொய்க்கால் குதிரை,  போன்ற ஏராளமான படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், என ஏராளமான நடிகர்களுடன் நடித்துள்ள ராதாரவி... சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!

36
Radha Ravi acting More then 500 Films

Radha Ravi acting More then 500 Films

இவரின் தந்தை எம்.ஆர்.ராதா நாடகத்துறையில் மிகப்பெரிய லெஜெண்ட் என்றாலும்... இவர் ஆரம்பத்தில் தன்னுடைய அண்ணனின் சில மேடை நாடகங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் முழுக்க முழுக்க சினிமாவில் நடித்தார். தன்னுடைய அப்பா அளவுக்கு நாடகத் துறையில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை என்றாலும்... சினிமா துறையிலும் இவருக்கென மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ராதாரவி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். அதேபோல் சின்ன திரையிலும்... விக்ரமாதித்தன், திருவிளையாடல், செல்லமே, ரங்க விலாஸ், போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 

46
Radha Ravi Latest Interview

Radha Ravi Latest Interview

டப்பிங் ஆர்டிஸ்ட்டாக சில படங்களில் பணியாற்றியுள்ள ராதா ரவி, தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்யின்  தலைவராகவும் உள்ளார். மேலும் இது நம்ம பூமி, இளைஞரணி ,சின்னமுத்து, போன்ற சில படங்களை தயாரித்து உள்ளார். அரசியலிலும் பல வருடங்களாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் மை இந்தியா 24 * 7 என்கிற youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய திரையுலக வாழ்க்கை, பர்சனல் வாழ்க்கை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த பேட்டியில் தான் தன்னுடைய தங்கை ராதிகாவையே காதலிப்பது போல் ஒரு படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

34 படமும் ஃபிளாப்.. ஐட்டம் டான்சில் விஜயகாந்துக்கு நிகராக கட்டவுட் வைத்து கொண்டாடப்பட்ட அனுராதா!

56
Radha Ravi and Vijayakanth Movie

Radha Ravi and Vijayakanth Movie

ராதாரவி விஜயகாந்த் குறித்து பேசும்போது, விஜயகாந்த் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறியபோது நீங்கள், விஜயகாந்த், ராதிகா, இணைந்து பல படங்களில் நடிச்சிருக்கீங்க இல்லையா என கேட்டதற்கு, ஆம் சில படங்களில் நடித்துள்ளேன். அந்த சமயத்தில் ராதிகா.. விஜயகாந்துடன் காதலில் இருந்தது தெரியுமா? என கேட்டார்.  அதெல்லாம் அப்போது தெரியாது, ஆனால் அரசல் புறசலாக சில தகவல்கள் அப்போது வெளியானது. அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டேன். அது அவர்களுடைய சொந்த வாழ்க்கை என தெரிவித்தார். தொடர்ந்து பேசியபோது தான் 'வீரபாண்டியன்' படத்தில் ராதிகாவை காதலிப்பது போல் நடித்ததாக கூறி ஷாக் கொடுத்தார்.

66
Radhika Sarathkumar

Radhika Sarathkumar

1987-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை, கார்த்திக் ரகுநாத் என்பவர் இயக்க, துரை இந்தப்படத்திற்கு கதை - திரைக்கதை எழுதி இருந்தார். விஜயகாந்துடன் சிவாஜி கணேசனும் முக்கிய ரோலில் நடிக்க, ராதிகா ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகர் ஜெய்ஷ்ங்கர் CID கதாபாத்திரத்தில் நடிக்க... ராதாரவி வில்லனாகவும் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும், அப்போதே சில விமர்சனங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, மீண்டும் இந்த பேட்டியில் ராதாரவி இந்த விஷயத்தை கூறியதை தொடர்ந்து நடிப்பா இருந்தாலும் மனசாட்சி வேண்டாமா? என ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருக்கும் போதே தேம்பி தேம்பி அழுத ஜானகி! எந்த பாட்டுக்கு தெரியுமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா சரத்குமார்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved