MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி! ஆனா பிரசாந்துக்கு இவ்வளவு கம்மி சம்பளமா?

கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி! ஆனா பிரசாந்துக்கு இவ்வளவு கம்மி சம்பளமா?

நடிகர் விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடித்துள்ள டாப் ஸ்டார் பிரசாந்த் அப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 02 2024, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Prashanth

Prashanth

நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த பிரசாந்த், அடுத்தடுத்து செம்பருத்தி, ஜீன்ஸ், ஜோடி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வந்தார். இதன் காரணமாகவே அவரை டாப் ஸ்டார் என்றும் அழைக்கத் தொடங்கினர். பின்னர் உடல் எடை கூடியதால் பிரசாந்தின் மார்க்கெட் அதள பாதாளத்துக்கு சென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Top Star Prashanth

Top Star Prashanth

பின்னர் உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுக்க முடிவெடுத்த பிரசாந்த், தன் தந்தையின் மூலம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியதோடு, அப்படத்திற்கு தமிழில் அந்தகன் என பெயரிட்டு அதில் ஹீரோவாகவும் நடித்தார் பிரசாந்த். அது இசையை சம்பந்தமக கொண்டு உருவான படம் என்பதால் அதற்காக பிரத்யேகமாக இசைப்பயிற்சியும் பெற்றார் நடிகர் பிரசாந்த். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இயக்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்... 100 கோடி ரூபா மதிப்புள்ள வீட்டை விற்றது ஏன்? நடிகை சாந்தி வில்லியம்ஸ் சொன்ன ஷாக்கிங் தகவல்

34
Prashanth Salary

Prashanth Salary

அந்தகன் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது. அப்படம் வெற்றிபெற்ற கையோடு, பிரசாந்த் நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அது வேறெதுவுமில்லை, தளபதி விஜய்யுடன் பிரசாந்த் முதன்முறையாக நடித்து கோட் படம் தான். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

44
Prashanth salary for GOAT movie

Prashanth salary for GOAT movie

கோட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் விஜய், அப்படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அது ஒருபுறம் இருக்க, பிரசாந்தின் நண்பனாக வரும் பிரசாந்த், அப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரு.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. பிரசாந்த் இப்படத்தில் நடிக்க கம்மி சம்பளம் வாங்கி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருகிறது.

இதையும் படியுங்கள்...  கட்டாயப்படுத்தி என்னையும் என் தங்கையையும் உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்தனர்! ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரசாந்த் (நடிகர்)
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved