நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுனை ஸ்கெட்ச் போட்டு அபேஸ் செய்த வேலைக்கார பெண்! சிக்கியது எப்படி?
பிரபல நடிகர் கருணாகரன் வீட்டில், 60 சவரன் நகை திருடு போனதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில்... பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Karunakaran
தமிழில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கருணாகரன். இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் நடித்த, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறைவி, பீட்சா, ஒரு நாள் கூத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, அயலான் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
Karunakaran house maid Stealing Jewel
காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், என்பதை தாண்டி இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'உப்பு கருவாடு' என்கிற திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரு மகள்களுடன் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஐடி துறையில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருடைய மனைவி 'தென்றல்' வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது... பூட்டி இருந்த பீரோவை உடைத்து, சுமார் 60 சவரன் நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது.
சென்னையை பிரித்து மேயும் மழை! பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததா?
Comedian Karunakaran
எனவே உடனடியாக இதுகுறித்து சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரும் வீட்டுக்குள் வரவில்லை என்பதையும் அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், கருணாகரன் வீட்டில் வேலை செய்யும் , வேலை ஆட்கள், செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் யாரும் திருடவில்லை என கூறினர்.
Jewel Theft
சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரும் வந்து செல்லாதது உறுதி செய்யப்பட்டதால்... வீட்டில் வேலை செய்யும் நபர்களின் கை ரேகை சேகரிக்கப்பட்டு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கருணாகரன் வீட்டில் வேலை செய்து வந்த விஜயா என்கிற பெண் தான் பீரோவை உடைத்து 60-வது சவரன் நகையை திருடினார் என்பது தெரிய வந்தது. பக்காவாக ஸ்கெச் போட்டு யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் திருடி, நகையை அவர் எடுத்து சென்றிருந்தாலும்... கை ரேகை இவரை காட்டி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, இந்த திருட்டு சம்பவத்திற்கு பின்னால் யார் யாரெல்லாம் உள்ளார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த பெண் சுமார் 100 சவரனுக்கு மேல் நகை திருடி சிக்கியதை தொடர்ந்து, இதே போல் வேலைக்கார பெண் ஒருவர் நகை திருடி சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!