தெலுங்கு கத்துக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்னு சொல்லிட்டேன் - நடிகர் ஜீவா!
Jiiva said why should I learn Telugu : என்னுடைய அம்மாவும், அப்பாவும் தெலுங்கு கத்துக்கொள் என்று சொல்லும் போது தெலுங்கு கத்துக் கொண்டு நான் என்ன பண்ண போறேனு சொல்லிட்டேன் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
Jiiva said why should I learn Telugu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ஜீவா. பெரிதாக எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. வருடத்திற்கு ஒன்னு இல்லை என்றால் 2 படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்களும் சும்மா திரைக்கு வருகிறது அப்படியே போகிறது என்று மட்டுமே இருக்கிறது. வசூல் ரீதியாக எந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பெரும் புள்ளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதே போன்று சேரன் பாண்டியன் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
Actor Jiiva Filmography
ஆசை ஆசையாய் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து தித்திக்குதே, ராம், டிஸ்யூம், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, காஃபி வித் காதல் கஸ்டடி, பிளாக் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். இதில், ராம், கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட ஒரு சில ஹிட் படங்களில் நடித்திருந்தார். ஆனால், பெரியளவில் தாக்கம் இல்லை. தெலுங்கில் யாத்ரா 2 படத்திலும் நடித்துள்ளார்.
Jiiva said why should I learn Telugu
இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ஆஃபர் குறித்து ஜீவா தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அம்மாவும், அப்பாவும் தமிழ் தவிர மற்றொரு மொழி கற்றுக் கொள்ள சொன்னார்கள். அதுவும் தெலுங்கு கத்துக்கோ என்றார்கள். ஆனால் தெலுங்கு கற்றுக் கொண்டு என்ன செய்ய போகிறேன். தமிழில் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் தமிழில் தான் நடிப்பேன். என்னுடைய உணர்வுகளை தமிழில் தான் என்னால் தெளிவாக சொல்ல முடியும். தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்றேன். அப்போது தான் யாத்ரா 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது எனக்கு பயத்தை கொடுத்துவிட்டது. ஆனால், படத்தில் சண்டையும் இல்ல, டான்ஸ், சாங்ஸ் என்று எதுவும் கிடையாது. தெலுங்கு மட்டும் கற்றுக் கொண்டால் போதும் என்று இருந்தது. அதன் பிறகு தான் யாத்ரா 2 படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.
Jiiva Talk about Yatra 2 Movie
தமிழ் மற்றும் தெலுங்கு தவிர ஹிந்தி மற்றும் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் ஜீவா நடித்துள்ளார். இப்போது அகத்தியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, விடிவி கணேஷ் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.