MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷின் 'இட்லி கடை' படம் எப்படி இருக்கு? முதல் ஆளாக படத்தை பார்த்து விமர்சனம் கூறிய பிரபலம்!

தனுஷின் 'இட்லி கடை' படம் எப்படி இருக்கு? முதல் ஆளாக படத்தை பார்த்து விமர்சனம் கூறிய பிரபலம்!

நடிகர் தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை' திரைப்படத்தின், 40 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ். 

2 Min read
manimegalai a
Published : Nov 05 2024, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Dhanush Raayan

Dhanush Raayan

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக, இவரே இயக்கி - நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் வெளியானது. தனுஷின் 50-ஆவது திரைப்படமாக வெளியான இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. வடசென்னை பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், தனுஷ் இதற்க்கு முன் ஏற்று நடித்திராத தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடிக்க, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடித்திருந்தனர். மேலும் செல்வராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டி இருந்தார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்திற்கு படத்தொகுப்பு செய்திருந்த 'ராயன்' படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். 

25
Nilavukku En Mel Ennadi Kobam

Nilavukku En Mel Ennadi Kobam

இந்த படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அக்கா மகனை, ஹீரோவாக வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்'. இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
 

35
Idly Kadai

Idly Kadai

இதை தொடர்ந்து, தனுஷ் தற்போது 'இட்லி கடை' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

45
GV Prakash Kumar

GV Prakash Kumar

இந்நிலையில் இந்த படத்தின் இசை கோர்ப்பு பணிகள் துவங்குவதற்கு முன்,தனுஷ் ஜிவி பிரகாஷ் குமாருக்கு 'இட்லி கடை' படத்தின் 40 நிமிட காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். இதை பார்த்து விட்டு தான் ஜிவி பிரகாஷ் குமார் இட்லி கடை படம் குறித்த தன்னுடைய முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜிவி பிரகாஷ் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் தனுஷ் இந்த படத்தின் முக்கிய அம்சமாக எமோஷனை கதைக்குள் புகுத்தி எடுத்துள்ளார். எனவே திருச்சிற்றம்படம் போலவே இந்த படமும் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் விதத்தில் இருக்கும்.
 

55
Nithya Menen with Tamil director actor Dhanush

Nithya Menen with Tamil director actor Dhanush

இதற்கு முன் அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நான் தனுஷ் உடன் பணியாற்றி இருந்தாலும், 'இட்லி கடை' திரைப்படம் முழுக்க முழுக்க ரூரல் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷின் கேரக்டர் மிகவும் அருமையாக உள்ளது என ஜி வி பிரகாஷ் தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி படம் மீதான ஆவலை அதிகரிக்க செய்துள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
ஜி. வி. பிரகாஷ் குமார்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved