சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்த தயாரிப்பாளர் யார்...? உண்மையை வெளியிட்ட பிரபல நடிகர்..!
தமிழ் சினிமாவில், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, ஆரம்ப காலத்தில் மிரட்டி, அவமதித்த தயாரிப்பாளர் குறித்த தகவலை பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ள போதிலும், சினிமாவில் அறிமுகமான காலங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகே ஹீரோவாக உயர்ந்தார்.
இவர் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு... தன்னை மிரட்டிய தயாரிப்பாளர் குறித்து 'தர்பார்' படத்தின் ஆடியோ லான்ச்சில் கூறி இருந்தார். ஆனால் மரியாதை நிமித்தமாக அவர் பெயரை கூறாத நிலையில் தற்போது அந்த தயாரிப்பாளர் யார் என்கிற தகவலை, பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார்.
அதாவது ரஜினிகாந்த் குணச்சித்திர வேடத்தில் நடித்த படத்தின் சம்பளத்தை தயாரிப்பாளரிடம் கேட்ட போது, அவர் மிரட்டி இந்த சினிமாவை விட்டே உன்னை காணாமல் போக வைத்துவிடுவேன் என கூறி அவமதித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த தயாரிப்பாளர் முன்பே... வெளிநாட்டு காரில் செம்ம கெத்தாக போய் நின்றதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஆனால் தன்னை ஆரம்ப காலத்தில் இப்படி அவமதித்த தயாரிப்பாளர் யார் என்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிக்காத நிலையில், நீண்ட நாட்களுக்கு பின், பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் ரஜினிகாந்தை அவமதித்த தயாரிப்பாளர் சிவசுப்ரமணியம் என்பவர் தான் என்கிற உண்மையை போட்டுடைத்துள்ளார்.