- Home
- Cinema
- கமல் இப்படிப்பட்டவரா? உதவி கேட்டு சென்றவரை அசிங்கப்படுத்தி அனுப்பிய கமல்? கண்ணீருடன் பகிர்ந்த காமெடி நடிகர்.!
கமல் இப்படிப்பட்டவரா? உதவி கேட்டு சென்றவரை அசிங்கப்படுத்தி அனுப்பிய கமல்? கண்ணீருடன் பகிர்ந்த காமெடி நடிகர்.!
Actor bujji babu about kamal: மகளின் கல்விக்காக உதவி கேட்டு சென்ற என்னை கமல் அசிங்கப்படுத்தி விட்டதாக நடிகர் ஒருவர் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேக்கப் மேன் புஜ்ஜி பாபு பேட்டி
திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் என்பது திரைக்குப் பின்னால் பணியாற்றும் கலைஞர்களுக்கு கிடைப்பதே இல்லை. ஒரு நடிகரின் முக பாவனை தொடங்கி, அவர்கள் அணியும் உடை வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவர்களில் முக்கியமானவர்கள் மேக்கப் மேன்கள் தான். மேக்கப் மேன்களின் வாழ்க்கையோ அல்லது அவர்களது கதையோ பெரிய அளவில் கவனிக்கப்படாமலேயே போய்விடுகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் மேனாக பணியாற்றிய புஜ்ஜி பாபு தனது பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
கமலால் ஏற்பட்ட கசப்பான அனுபவம்
குறிப்பாக நடிகர் கமலஹாசனுடன் பணியாற்றிய காலத்தில் தனக்கு நேர்ந்த சில கசப்பான சம்பவங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு மேக்கப் மேனாக இருந்தவர் புஜ்ஜி பாபு. தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தான் மேக்கப் மேனாக இருந்தபோது சந்தித்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கமலிடம் பணியாற்ற மறுப்பு
அவர் கூறியதாவது, கமலஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் மேக்கப் மேனாக பணியாற்றினேன். அப்போது ஜெய்ப்பூரில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு வருமாறு கமல் அழைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் ஜெய்ப்பூருக்கு செல்ல மறுத்துவிட்டேன். பின்னர் கமல் தன்னை அலுவலகத்திற்கு அழைத்து மீண்டும் மேக்கப் மேனாக பணியாற்றுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது சார் என்று மறுத்து விட்டேன். நான் அவரிடம் வேலை கேட்டு செல்லவில்லை வேலை கேட்டு சென்றால்தான் பயப்பட வேண்டும்.
கடுமையாக திட்டிய கமல்
கமல் நடிப்பில் வெளியான ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’ படம் வரைக்கும் அவருக்கு மேக்கப் மேனாக இருந்தேன். அப்போது எனக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. என்னுடைய மூத்த மகளின் படிப்பிற்காக பணம் தேவைப்பட்டது. எனவே கமலிடம் கேட்கலாம் என்று அவரை சந்தித்து என் பெரிய பாப்பா படிக்கிறாங்க. அவங்களுக்கு பீஸ் கட்டணும், பண உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் மிகவும் கடமையாக திட்டி பேசினார். அது மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் அடிமையாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் கமல் படங்களில் பணியாற்றுவதை நிறுத்தி விட்டேன். இனி கமல் படங்களுக்கு பணியாற்றப் போவதில்லை என முடிவெடுத்தேன்.
உதவி செய்த சந்தானம்
ஒரு நாள் இயக்குனர் ஷங்கர் எனக்கு போன் செய்து ஏன் கமல் சாருக்கு மேக்கப் போட வரவில்லை என்று கேட்டார். வேண்டாம் சார் எனக்கு அந்த வர விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன் என புஜ்ஜி பாபு தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சந்தானத்துடன் பயணம் செய்வது குறித்து பேசிய அவர், சந்தானம் ஹிந்தியில் ஒரு படம் நடிக்க கமிட்டாகி இருந்தார். அவருக்கு இந்தி தெரியாது என்பதால் அவருக்கு உதவியாக நான் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் ‘சிங்கம்’ பட வாய்ப்பை தவற விட்டு விட்டேன். அதனால் மன வருத்தத்தில் இருந்தேன். அதன் பிறகு சந்தானம் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். தினமும் என் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தான் மேக்கப் போடுவார். அவரைப் போல் நண்பர்களை யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது என்று புஜ்ஜி பாபு கூறினார்.
விஜயுடன் ஏற்பட்ட நட்பு
‘தலைவா’ படத்தில் முதல் முறையாக விஜய் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், முதலில் சமையல்காரராக தம்பி ராமையா நடிக்க வேண்டியது. அவர் வராததால் நான் நடித்தேன். என்னை பார்த்ததும் விஜய் சார் மிகவும் தயங்கினார். ஆனால் இயக்குனர் சொன்ன வசனத்தை பேசி காட்டியதும் விஜய் சார் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். ஒருநாள் நான் மீன் மார்க்கெட் சென்று கொண்டிருந்தேன் அப்போது விஜய் சார் காரில் என் பின்னாடி வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். எப்படி இருக்கீங்க? அடுத்த படம் நடிக்கலாமா? என்று கேட்டார். ‘பைரவா’ படப்பிடிப்பிற்கு சென்றபோது என்னை பார்த்து மீண்டும் கட்டிப்பிடித்து பேசினார். விஜய் சார் மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்த்ததே இல்லை என்று புஜ்ஜி பாபு கூறி முடித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

