ஆர்யா குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்... மனைவி சயீஷா வீட்டில் கொரோனாவுக்கு 2வது உயிரிழப்பு...!
நடிகர் ஆர்யாவின் மனைவியும், பிரபல நடிகையுமான சயீஷா குடும்பத்தில் ஏற்கனவே ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது மற்றொரு மரணம் அரங்கேறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு ஆகஸ்ட்16ம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மும்பை லீலாவதி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆவதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். வயது மூப்பு காரணமாக இருவரது உடலும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் சிகிச்சை பலன்றி ஆகஸ்ட் 21ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சர்ச்சை, உயர் ரத்தம் அழுத்த, இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளன.
இதையடுத்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த திலீப் குமாரின் மற்றொரு சகோதரரான இஹ்சான் கானும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இஹ்சான் கானுக்கு ரத்த அழுத்த பிரச்சனை மற்றும் இதயக் கோளாறு இருந்தது. இஹ்சான் கான் மரண செய்தி அறிந்த பாலிவுட்காரர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொரோனா மரணத்தால் ஆர்யாவும், சயீஷாவும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.