அந்தரத்தில் பறந்து பறந்து ரஷ்யாவில் சாகசம் செய்த 'வலிமை' டீம்..! வைரலாகும் வேற லெவல் BTS புகைப்படங்கள்..!
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 'வலிமை' படக்குழு ரஷ்யா சென்றிருந்த நிலையில், அங்கு எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கும் அஜித், படத்தின் 90 சதவீத காட்சிகளை நடித்து முடித்துவிட்ட போதிலும், 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை காட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது.
இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண் டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி உள்ளார்.
பைக் ரைடிங் பிரியரான அஜித், ரஷ்யாவில் சில பைக் ரசர்களுடன் சேர்ந்து, சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் ரைடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. அஜித் மற்ற சில பைக் ரைடர்ஸுடனும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியது.
அதே போல் ரஷ்யாவை சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர், அஜித்துக்கு அன்பு பரிசாக , டீ ஷர்ட், சில சாக்குலேட்டுகள் போன்றவற்றை கொடுத்த தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை உட்சாகமடைய செய்தது.
ரஷ்யாவில் தற்போது 5000 கிலோ மீட்டர் பைக் ரைடில் ஈடுபட்டுள்ள அஜித்தை, 'வலிமை' பட தயாரிப்பாளர் போனி கபூர் சந்தித்த போது வெளியான புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து வலிமை படக்குழு ரஷ்யாவில், எடுத்த பைக் ஸ்டண்ட் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கற்பனைக்கு எட்டாத அளவிற்கு, அந்தரத்தில் தொங்கியபடியெல்லாம் ஸ்டண்ட் காட்சிகளை வேறு லெவலுக்கு எடுத்துள்ளார் இயக்குனர் எச்.வினோத்.
அஜித்துடன் பைக் ஸ்டண்ட் காட்சியில் ஈடுபட்ட ரஷ்யாவை சேர்ந்த வீரர்கள், இந்த புகைப்படங்களுக்கே தற்போது ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த bts புகைப்படங்கள் வெளியாகி, வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது என்றால் அது மிகையல்ல.