சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் - எம்புரான் பட சர்ச்சைக்கு வில்லன் கொடுத்த நச் பதில்
மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தின் சர்ச்சை குறித்து வில்லன் நடிகர் அபிமன்யு சிங் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Abhimanyu Singh About Empuraan Movie Controversy : பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த படம் எம்புரான். இது கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தில் மோகன்லால் உடன் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சூரஜ், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் கடந்த மார்ச் மாதம் 27ந் தேதி ரமலான் விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையாடி வரும் எம்புரான், மலையாள திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
Empuraan
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு
சாதனை ஒருபுறம் இருக்க, மறுபுறம் எம்புரான் திரைப்படம் சர்ச்சையிலும் சிக்கியது. குறிப்பாக இப்படத்தில் குஜராத் கலவரம் உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எம்புரான் திரைப்படத்தில் 24 காட்சிகளுக்கு கத்திரி போடப்பட்டதோடு படத்தில் இருந்து சுமார் 3 நிமிட காட்சிகளை நீக்கி அதை மீண்டும் வெளியிட்டனர். குறிப்பாக இதில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங்கிற்கு, படத்தில் பாபு பஜ்ரங்கி என பெயரிடப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்...சர்ச்சைகளை கடந்து வசூல் வேட்டையாடும் மோகன்லாலின் எம்பூரான் – உலகளவில் ரூ.250 கோடி வசூல் குவித்து சாதனை!
Abhimanyu Singh
எம்புரான் பட வில்லன் அபிமன்யு சிங் பேட்டி
குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவரின் பெயரை வில்லனுக்கு வைத்ததால் அதை மாற்றக் கோரி எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பால்தேவ் என அந்த பெயரை மாற்றினர். இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை குறித்து அப்படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். ஒரு நடிகரின் கடமை என்னவென்றால், அவர் அந்த படத்திற்கு தேவையானதை செய்வது தான். ஒரு வேகத்தில் நடிக்கிறோம். அதன் விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. எம்புரான் படத்திற்கு சிக்கல் வந்துள்ளதை அண்மையில் தான் அறிந்தேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் அதை விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
Empuraan Controversy
எம்புரானில் அதிக வன்முறை ஏன்?
படத்தில் அபிமன்யு சிங் நடித்த கதாபாத்திரம் அதிகளவில் கெட்ட வார்த்தை பயன்படுத்தும்படி இருந்தது பற்றி அவர் கூறுகையில், “அது டைரக்டரோட பார்வை. அவர் எந்த அளவு வன்முறையை காட்ட விரும்புகிறாரோ அது அவரின் முடிவு. ஒரு காட்சி எப்படி வர வேண்டும் என்பதை இயக்குனர் மற்றும் எழுத்தாளர் தான் தீர்மானிக்கிறார். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பதே நடிகர்களின் வேலை. அதை தான் நான் செய்தேன்” என அபிமன்யு சிங் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!