பிக்பாஸ் வீட்டை வசீகரித்த ஆரியின் மகள்...! இது தான் பிடிச்சிருக்கு நெகிழ வைத்த மனைவி..!
பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரும் எதிர்பார்த்த, ஆரியின் மனைவி மற்றும் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது தான் சற்று முன் வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்கள் ஆரியை எதிரியாக பார்த்தாலும், ஆரி தன்னால் முடிந்தவரை அனைவர் மீதும் கோவத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக அனுசரித்து விளையாடி வருகிறார். எந்த ஒரு தருணத்திலும் பொறுமையை இழக்காமல்... நிதானத்தோடு விளையாடுவது தான் இவரது மிகப்பெரிய பலமாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
அதே போல், ஆரியை எதிர்த்தால் கூட அவர்களை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஆரியின் ஆர்மியை சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். அப்படி தான் அனிதா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் பிரபலங்களின் குடும்பத்தினர் கூட ஆரி மீது தங்களுக்கு உள்ள மரியாதையை வெளிப்படுத்தி சென்றனர். இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த ஆரியின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள்.
முதலில் ஆரியின் மகள் ரியா வாசல் வழியாக வருகிறார். பின்னர் ரியாவிடம் பேசும் பிக்பாஸ், உங்கள் அம்மா ஸ்டார் ரூமில் இருக்கிறார் அழைத்து வாருங்கள் என கூறி ஆரி அன்பும், காதலும் கலந்த புன்னகையோடு மனைவியை அழைத்து வருகிறார்.
பின்னர், ஆரியின் மனைவி அவரிடம் பேசும் போது, யாரையும் ஹர்ட் செய்யாமல் விளையாடுகிறீர்கள் அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதே போல் எப்படி வீட்டில் இருப்பீர்களோ அதே போல் தான் இங்கும் இருக்கிறீர்கள். போலித்தனமாக இல்லை என கூறி ஆரியின் உண்மை குணம் இது தான் என்பதை ரசிகர்களுக்கும் தெரிவித்துள்ளார்.