- Home
- Cinema
- Divorce : இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன்? பல வருடங்களுக்குப் பின்னர், பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபல நடிகர்.!
Divorce : இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன்? பல வருடங்களுக்குப் பின்னர், பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபல நடிகர்.!
Aamir Khan Divorce Reason : பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது விவாகரத்து முடிவுகள் குறித்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். அவரது திருமண முறிவுக்கான காரணங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

Aamir Khan Divorce Reason
பாலிவுட் துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர்கான். இவர் தனது 21வது வயதில் ரீனா தாத்தாவை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு அமீர்கானின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளன. சுமார் 16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண பந்தம் 2002 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிவு
அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து ‘லகான்’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவை காதலித்தார். 2005 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆசாத் என்கிற மகனும் உள்ளனர். முதல் திருமணம் போலவே 16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண பந்தம் 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கிரண் ராவுடன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பொழுது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இரண்டு மனைவிகளையும் பிரிந்த அமீர் கான்
கிரண் ராவை விவாகரத்து செய்த போது, “நாங்கள் கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் குடும்பமாகவும் மகனுக்கு பெற்றோராக இருப்போம்” என்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் கிரண் ராவ் அளித்த பேட்டியில், “தங்களுக்குள் எந்த பெரிய சண்டையோ அல்லது துரோகமோ கிடையாது, இந்த காதல் உறவு மாறி நட்பு ரீதியான உறவாக மாறிவிட்டது. பிரிந்து வாழ்வதே சிறந்தது என்ற ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்தோம்” என கிரண் ராவ் கூறினார்.
தவறை ஒப்புக்கொண்ட அமீர்கான்
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் இருவரிடமிருந்து ஏன் பிரிந்தேன் என அமீர்கான் விளக்கியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இருவருடனும் உறவு சரியாக அமையவில்லை என்றும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாதது தான் காரணம் என்று தன் தவறையும் ஒப்புக்கொண்ட 21 வயதில் ரீனா தாத்தாவை காதலித்த பொழுது தனக்கு அவ்வளவு முதிர்ச்சி இல்லை என்றும், சிறிய வயதில் திருமணம் செய்ததால் போதிய பக்குவம் இல்லை என்றும், அந்த சமயத்தில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததால் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாததும் பிரிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
மனைவிகளை பிரிந்த காரணம் என்ன? அமீர்கான் ஓபன் டாக்
வேலைப்பளு காரணமாக தனது மூத்த மனைவியின் குழந்தைகளான ஜூனைத் மற்றும் ஐராவுடன் நேரம் செலவிட முடியாமல் போனது குறித்து இன்று வரை வருத்தப்படுவதாக அமீர்கான் கூறினார். இதற்கு தானே முழு காரணம் என்று அவர் தன்னை குற்றம் சாட்டியுள்ளார். “தவறை ஒப்புக்கொள்வதால் யாரும் குறைந்து போட மாட்டார்கள், நானும் என் தவறை ஒப்புக்கொண்டேன். தற்போது அந்த தவறை சரி செய்ய தொடங்கி இருக்கிறேன். குடும்பத்தினருடன் முடிந்தவரை அதிகம் நேரம் செலவிட முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். முதல் மனைவியுடன் விவாகரத்துக்குப் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ரீனாவின் தந்தை இறந்தபோதும், சமீபத்தில் மகள் ஐராவின் திருமணத்தின் போதும் அமீர்கான் முன்னின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
கௌரி ஸ்பார்ட் உடன் நெருக்கம்
இரு மனைவிகளை பிரிந்தாலும் தனது இரண்டு முன்னாள் மனதில் உடனும் அமீர்கான் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்திய விழாக்களில் ரீனா ரித்தா மற்றும் கிரண் ஆகிய இருவருடனும் அவர் ஒரு ஒன்றாக கலந்து கொண்டு ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்து வருவதை காட்டினார். தற்போது தனது மகன் ஜூனைத் கான் அறிமுகமாகும் படத்தின் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 61 வயதாகும் அவர் தற்போது கௌரி ஸ்பார்ட் என்பவர் உடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2022 மார்ச்சில் நடந்த அமீர் கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கௌரி ஸ்பார்ட் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இருப்பினும் இதுகுறித்து அமீர்கான் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

