- Home
- Cinema
- Ira Khan Birthday : பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கான் மகள்... வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்
Ira Khan Birthday : பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கான் மகள்... வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்
Ira Khan Birthday : அமீர்கானின் மகள் ஐரா கான் தனது 25-வது பிறந்தநாளை பிகினி உடை அணிந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மூத்த மனைவி ரீனா தத்தாவிற்கு பிறந்தவர் ஐரா கான். இவர் அண்மையில் தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அமீர் கான், அவரின் முதல் மனைவி ரீனா தத்தா, சகோதரர் ஜூனைத் கான், அமீர்கானின் மகன் ஆசாத் ராவ் கான், ஐரா கானின் காதலர் நுபுர் ஷிகாரே ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐரா கானின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. குறிப்பாக அவர் பிகினி உடையில் தனது 25-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இதுதவிர காதலனுடன் நீச்சல் குளத்தில் ஐரா கான் ஜாலியாக குளிப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் ஐரா கானுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அமீர்கான் கைவசம் லால் சிங் சட்டா திரைப்படம் மட்டுமே உள்ளது. தி பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக தயாராகி உள்ள இப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி இப்படம் திரை காண உள்ளது.
இதையும் படியுங்கள்... Rachitha Mahalakshmi : தனிமையால் மனவேதனை... காதல் கணவரை பிரிந்தது குறித்து மவுனம் கலைத்த ரக்ஷிதா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.