- Home
- Cinema
- 'ஜெயிலர்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்!
'ஜெயிலர்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்!
'ஜெயிலர்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, ரவி எங்கிற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன், பேட்டை, அண்ணாத்த, ஆகிய படங்களை விட தற்போது வெளியாகி உள்ள 'ஜெயிலர்' படம் தான் ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது. எனவே ஒட்டு மொத்த படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழில் மட்டுமின்றி, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வரும் இந்த படம் ஒரே வாரத்தில் 375 கோடி வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
8-ஆவது நாளில் 400 கோடி வசூலை தாண்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அதே போல் நேற்றைய தினம், 'ஜெயிலர்' படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, பட குழுவினர் சக்சஸ் மீட் ஏற்பாடு செய்து படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
'ஜெயிலர்' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது ஒரு புறம் இருக்க, தற்போது இந்த படத்திற்கு வழங்கப்பட்ட யு/ஏ சான்றிதழை ரத்து செய்து, படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 'ஜெயிலர்' படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் செல்வனுக்கு இந்த பெண் என்ன உறவு என்று தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!