கதிரை தேடி வந்த அழகான பெண் - பதற்றமான ராஜீ - ஓ இது தான் காதலா?
Kathir and Raji Love Possessive: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிரை தேடி அழகான பெண் வந்ததால் ராஜீ பதற்றமடைந்த சூழலில் அடுத்த என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் ராஜீக்கு மட்டும் காலத்தின் கட்டாயம் மற்றும் கோமதின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது. கொஞ்ச நாட்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருந்த நிலையில் இப்போது ஒருவர் மீது ஒருவர் மீது காதலுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இன்னும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கவில்லை. ஆனால், கதிருக்கு எது ஒன்றினாலும் ராஜீயால் தாங்க முடியாது. அதே போன்று ராஜீக்கு எது ஒன்றாலும் கதிராலும் தாங்க முடியாது.
கதிரை தேடி வந்த அழகான பெண்
கதிரின் டிராவல்ஸ் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ராஜீ தனது நகையை விற்கவும் முடிவு செய்தார். ஆனால், பாண்டியன் தனது மகனுக்காக சொந்த நிலத்தை விற்று ரூ.10 லட்சம் கொடுத்தார். அதை வைத்து சொந்தமாக பாண்டியன் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் தொடங்கி நடத்தி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் ராஜீயை எப்படியாவது எஸ்ஐ ஆக ஆக்கி தீருவேன் என்று கதிர் குறிக்கோளாக இருக்கிறார். இதற்காக ராஜீக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் பாண்டியன் டிராவல்ஸீற்கு கதிரை தேடி அழகான பெண் ஒருவர் வந்தார். அப்போது கதிர் அங்கு இல்லை. அவர் ராஜீயிடம் கதிர் எங்கு என்று கேட்க, நான் கார் கேட்டிருந்தேன். டிரைவராக அவர் தான் வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
கதிர் டிரைவ் பண்ணுவதில்லை
ஆனால், ராஜீயோ கதிர் இப்போது டிரைவ் பண்ணுவதில்லை. மேலும், வேறு டிரைவர் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல, அதற்குள்ளாக கதிர் அங்கு வந்தார். உடனே இருவரும் கை கொடுத்து இருவரும் அறிமுகமாகி கொண்டனர். கதிரும், அந்த பெண்ணும் புறப்பட தயாரான நிலையில் ராஜீ கதிருடன் தனியாக பேசினார். அப்போது நீ டிரைவ் பண்ண கூடாது. அந்த பெண்ணுடன் போக் கூடாது. வேறொரு டிரைவரை அனுப்பி வை என்று கூறினார். இதெல்லாம் கதிர் மீது உள்ள காதலின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. அப்போதுதான் கதிர் அந்த பெண்ணுடைய தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை. அவரை தான் செக்கப்பிற்கு கூட்டிக் கொண்டு செல்கிறேன்.
தாத்தாவின் பாதுகாப்பிற்காக செல்கிறேன்
நான் வந்தால் தான் தாத்தா பாதுகாப்பாக இருப்பதாக சொல்கிறார் என்றார். அதனால், நான் போகலாமா வேண்டாமா என்று கேட்க சரி நீ போ. நீயும் வரயா என்று கதிர் ராஜீயை கேட்டார். இல்லை இல்லை நீ மட்டும் போ என்று சொல்லி அந்த பெண்ணுடன் கதிரை அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.