இவர்களையெல்லாம் உள்ளே விட்றாதீங்க... நயன்தாரா போட்ட Strict கண்டிஷன் - பாதுகாப்பு பணியில் 80 பவுன்சர்கள்
Nayanthara Vignesh Shivan wedding : பாதுகாப்பு பணிக்காக 80 பவுன்சர்களையும் களமிறக்கி உள்ளாராம் நயன்தாரா. அவர்களுக்கு ஒரு Strict கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளாராம்.
நடிகை நயன்தாரா தனது நீண்ட காதலனான விக்னேஷ் சிவனை இன்று கரம்பிடித்துள்ளார். திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்த காதல் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள நெருங்கிய உறவினர்கள் மற்றும் 200 திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று காலை முதலே ஏராளமான திரையுலக பிரபலங்கள் நட்சத்திர ஓட்டலிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி உள்ளது. இதன் காரணமாக திருமணத்திற்கு வருபவர்கள் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணிக்காக 80 பவுன்சர்களையும் களமிறக்கி உள்ளாராம் நயன்தாரா. அவர்களுக்கு ஒரு Strict கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளாராம். அது என்னவென்றால், திருமணம் நடக்கும் இடத்திற்கு பத்திரிக்கையாளர்கள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தானாம். அவர்கள் வந்தால் புகைப்படங்கள் வெளியாகி மொத்த பிளானும் சொதப்பி விடும் என்பதால் இத்தகைய உத்தரவை நயன் போட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... Nayanthara Wedding : திருமண பந்தத்தில் இணைந்த காதல் ஜோடி... விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார் நயன்தாரா