விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தை பார்க்க 5 காரணங்கள்!
Thalaivan Thalaivii Movie Reasons To Watch : விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாக இருக்கும் தலைவன் தலைவி படத்தை பார்க்க 5 காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

தலைவன் தலைவி
Thalaivan Thalaivii Movie Reasons To Watch : கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் காரணமாக நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் வெளியான ஏஸ் படத்திற்கு பிறகு தலைவன் தலைவி படம் வெளியாக இருக்கிறது. நாளை ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கும் தலைவன் தலைவி படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
விஜய் சேதுபதி:
மகாராஜா படத்திற்கு விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் ரசிகர்களின் ஏமாற்றத்தை தலைவன் தலைவி படம் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பக்கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டிராஜ்:
குடும்பக் கதைகளுக்கு பெயர் போன இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் என்பதால் இந்தப் படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் காம்போவில் உருவான முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.
நித்யா மேனன்:
காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு தமிழில் நித்யா மேனன் நேரடியாக நடித்து வெளியாகும் படம் தான் தலைவன் தலைவி. இந்தப் படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது கெமிஸ்டரி படத்தில் எப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்பது படம் பார்க்கும் போது தெரியும்.
சந்தோஷ் நாராயணன்:
தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் சந்தோஷ் நாராயணன். இதற்கு முன்னதாக சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இப்போது இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதனால், அவரது பாடல்கள் பாடல் அமைக்கப்பட்ட காட்சிகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொடிருக்கின்றனர்.
கதை:
பொதுவாக விஜய் சேதுபதிக்கு கதை அதிகளவில் வெற்றி கொடுத்திருக்கிறது. அப்படித்தான் நானும் ரௌடி தான், சேதுபதி மற்றும் மகாராஜா ஆகிய படங்கள், என்னதான் சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் படங்கள் என்று இருந்தாலும் படத்திற்கு கதை ரொம்பவே முக்கியம் என்ற சூழலில் கதை பற்றி நன்கு தெரிந்து கொள்வது நன்மை அளிக்கும். அப்படித்தான் குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் எப்படி அமைந்திருக்கிறது, படம் வெற்றி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.