- Home
- Cinema
- New Release : 3BHK முதல் பறந்து போ வரை... ஜூலை 4ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ
New Release : 3BHK முதல் பறந்து போ வரை... ஜூலை 4ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ
ஜூலை முதல் வாரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Theatre Release Movies
ஜூன் மாதம் தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான மாதமாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்காத மாதமாக ஜூன் அமைந்துள்ளது. அம்மாதம் ரிலீஸ் ஆன தக் லைஃப், குபேரா ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. டிஎன்ஏ, மார்கன், லவ் மேரேஜ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூலில் இந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனாம் ஏமாற்றத்துடன் நிறைவடைந்துள்ளது ஜூன் மாதம். அடுத்ததாக ஜூலை மாதம் ஆரம்பமே புதுப்படங்களின் வரவால் நிரம்பி உள்ளது. வருகிற ஜூலை 4ந் தேதி என்னென்ன தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
3பிஹெச்கே
ஜூலை 4ந் தேதி ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவையானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 3 பிஹெச்கே திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சொந்த வீடு என்பது பலரது கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற பல வருட கனவோடு இருக்கும் ஒரு மிடில் கிளாஸ் பேமிலியின் ஆசை நிறைவேறியதா என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அம்ரித் இசையமைத்து உள்ளார்.
பறந்து போ
கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கியவர் ராம். அவர் இயக்கத்தில் வருகிற ஜூலை 4ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் பறந்து போ. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை அஞ்சலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை - மகனின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் பறந்து போ.
பீனிக்ஸ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பீனிக்ஸ். இப்படத்தை அனல் அரசு இயக்கி உள்ளார். ஸ்டண்ட் மாஸ்டரான இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படமும் வருகிற ஜூலை 4ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகை தேவ தர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.
அஃகேனம்
புதுமுக இயக்குனர் உதயா கே இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அஃகேனம். இப்படத்தை அருண் பாண்டியன் தயாரித்துள்ளதோடு, தன்னுடைய மகளான கீர்த்தி பாண்டியனுடன் சேர்ந்து இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் அன்பிற்கினியாள் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் படமான இது வருகிற ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
உப்பு கப்புரம்பு
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் உப்பு கப்புரம்பு. இப்படத்தை சசி இயக்கி உள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் சுகாஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற ஜூலை 4ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.