16 நாளாகியும் குறையாத டான் வசூல்...எத்தனை கோடி தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் டான் படத்தின் 16 வது வசூல் குறித்த தகவல் பரவி வருகிறது.

don movie
உலகம் முழுவதும் கடந்த 13 -ம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம். 16 நாட்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை டான் படத்தின் தமிழக வசூல் ரூ 78 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
don movie
100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படும் டான் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், இவர்களுடன் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
don movie
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. டாக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இவர் நடித்துள்ள இந்த படத்தில் கல்லூரி மாணவராக கலக்கப்பான தோற்றத்தில் வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
don movie
ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 20 மற்றும் 21 -மேல் பிஸியாக உள்ளார். இதில் அனுதீப் இயக்கும் இந்த படம் மூலம் டோலிவுட்டுக்கு செல்கிறார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.