- Home
- Cinema
- ஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்; ஜூலை 18ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ
ஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்; ஜூலை 18ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ
ஜூலை 18ந் தேதி தியேட்டரில் மட்டும் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதுதவிர ஓடிடியில் என்னென்ன படங்கள் வருகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Theatre and OTT Release Movies on July 18
ஜூலை மாதம் தொடர்ச்சியாக சின்ன பட்ஜெட் படங்கள் தான் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 3 பிஹெச்கே, ராம் இயக்கிய பறந்து போ, சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் போன்ற திரைப்படங்கள் வெளிவந்த நிலையில், ஜூலை 2வது வாரம் வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர், விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகமான ஓஹோ எந்தன் பேபி, விமல் நடித்த தேசிங்கு ராஜா 2 ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இந்த நிலையில், ஜூலை 18ந் தேதியும் ஏராளமான சின்ன பட்ஜெட் படங்கள் தான் ரிலீஸ் ஆக உள்ளன. அதிலும் குறிப்பாக தியேட்டரில் மட்டும் 12 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாம். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஜூலை 18-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களில் நன்கு தெரிந்த படங்கள் என்றால் ஒன்றிரண்டு தான். மற்றவையெல்லாம் ரிலீஸ் செய்ய வேண்டுமே என்கிற கட்டாயத்தில் வெளியிடுகிறார்கள். ஏனெனில் இந்த வாரத்தை விட்டால் அடுத்த வாரம் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி என்கிற பெரிய பட்ஜெட் படம் வெளி வருகிறது. அதனால் அப்போது ரிலீஸ் செய்தால் தியேட்டர் கிடைக்காது என்பதால் இந்த வாரமே களம் புதிது, ஜென்ம நட்சத்திரம், சென்ட்ரல், ஆக்நேயா, ஆக்கிரமிப்பு, யாதும் அறியான், நாளை நமதே, டிரெண்டிங் ஆகிய புதுப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இதற்கு 70 திரையரங்குகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பன் பட்டர் ஜாம் & டைட்டானிக்
ஜூலை 18ந் தேதி ரிலீஸ் ஆகும் படங்களில் அதிகளவில் புரமோஷன் செய்யப்படும் படம் என்றால் அது பன் பட்டர் ஜாம் என்கிற திரைப்படம் தான். இப்படத்தில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா, சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ராகவ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இதற்கு போட்டியாக கலையரசன் மற்றும் ஆனந்தி நடித்த டைட்டானிக் படமும் ஜூலை 18ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சிவி குமார் தயாரித்துள்ளார். அதேபோல் பிக்பாஸ் பிரபலம் ஜாக்குலின் நடித்த கெவி படமும் இந்த வாரம், ரிலீஸ் ஆக உள்ளது. இதனுடன் சசிகுமாரின் ஃப்ரீடம் படமும் இந்த வாரம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஜூலை 18-ந் தேதி தமிழில் ஒரு படமும் ஒரு வெப் தொடரும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் ஜூலை 18ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் சட்டமும் நீதியும் என்கிற வெப் தொடர் ஜூலை 18ந் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இதனுடன் தெலுங்கில் Bhairavam திரைப்படம் ஜீ5-விலும், Asthra திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியிலும், The Bhootnii என்கிற இந்தி திரைப்படம் ஜீ 5 தளத்திலும், Special OPS என்கிற இந்தி வெப் தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டாரிலும், Bride Hard மற்றும் Finally Dawn ஆகிய ஆங்கிலப் படங்கள் அமேசான் பிரைம் ஓடிடியிலும், To Kill a Monkey என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஜூலை 18ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.