- Home
- Career
- வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்திய மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் ஸ்காலர்ஷிப்! மிஸ் பண்ணிடாதீங்க!!
வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்திய மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் ஸ்காலர்ஷிப்! மிஸ் பண்ணிடாதீங்க!!
பிரிட்டனின் புகழ்பெற்ற கிளாஸ்கோ பல்கலைக்கழகம், 2026-27 கல்வியாண்டில் முதுகலை பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் ஸ்காலர்ஷிப் அறிவித்துள்ளது. சிறந்த கல்வித் தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரிட்டனில் படிக்க ஆசையா?
பிரிட்டனின் புகழ்பெற்ற கிளாஸ்கோ பல்கலைக்கழகம் (University of Glasgow), 2026-2027 கல்வியாண்டில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக 15,000 யூரோ (சுமார் ரூ.18,21,721) மதிப்பிலான பிரத்யேக கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
• படிப்பு: வங்கிச் சேவை (Banking), நிதி (Finance), பொருளாதாரம் (Economics), மனிதவள மேலாண்மை (HRM) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓராண்டு முழுநேர முதுகலை (Master's) படிப்பைத் தொடர விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
• கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் படிப்பில் மிகச்சிறந்த தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியக் கல்வி முறையில் குறைந்தது 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
• நாடு: விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியக் குடிமகனாக இருப்பதோடு, சர்வதேச கட்டணப் பிரிவின் கீழ் (International Fee Status) வருபவராக இருக்க வேண்டும்.
முக்கியத் தேதிகள்
இந்தக் கல்வி உதவித்தொகைக்கு இரண்டு சுற்றுகளாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன:
1. முதல் சுற்று: விண்ணப்பிக்கக் கடைசி நாள் - பிப்ரவரி 23, 2026. (தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் 6-க்குள் தகவல் தெரிவிக்கப்படும்).
2. இரண்டாம் சுற்று: விண்ணப்பிக்கக் கடைசி நாள் - மே 18, 2026. (தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மே 29-க்குள் தகவல் தெரிவிக்கப்படும்).
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான gla.ac.uk/scholarships/asbsindiaachieversaward என்ற பக்கத்திற்குச் சென்று, "Apply Now" என்பதைத் தேர்ந்தெடுத்து தங்கள் விவரங்களைப் பதிவிடலாம்.
கூடுதல் சலுகைகள்
இந்தக் கல்வி உதவித்தொகை மட்டுமின்றி, 22 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஸ்காட்லாந்து முழுவதும் இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது. மேலும், 'World Changers' மற்றும் 'Global Leadership' போன்ற பிற கல்வி உதவித்தொகை திட்டங்களும் தகுதியுள்ள மாணவர்களுக்குக் கிடைக்கின்றன.
1451-ல் தொடங்கப்பட்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம், இந்த ஆண்டு தனது 575-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசையில் (QS Rankings) இப்பல்கலைக்கழகம் 79-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

