MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • குரூப் 4 சிலபஸ் மாறுதா? தேர்வர்களே உஷார்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

குரூப் 4 சிலபஸ் மாறுதா? தேர்வர்களே உஷார்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TNPSC 2026 குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் மாறுமா? சமூக வலைதள வதந்திகளுக்கு டிஎன்பிஎஸ்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முழு விபரம் உள்ளே.

1 Min read
Suresh Manthiram
Published : Dec 22 2025, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TNPSC தேர்வர்கள் குழப்பம்
Image Credit : Gemini

TNPSC தேர்வர்கள் குழப்பம்

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலை கனவுடன் இந்தத் தேர்வுகளை எழுதி வருகின்றனர். 2026-ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை (Annual Planner) சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது பாடத்திட்டம் (Syllabus) குறித்து இணையத்தில் பரவும் தகவல் தேர்வர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

25
பரவும் வதந்தி
Image Credit : X/TNPSC

பரவும் வதந்தி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு (2026) டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகத் தேர்வர்கள் இப்போதே முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குரூப் 4 உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இது ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது.

Related Articles

Related image1
TNPSC Group 2 ரிசல்ட் வெளியீடு! மெயின் தேர்வில் அதிரடி மாற்றம்! தேர்வர்கள் கவனத்திற்கு!
Related image2
Govt Exams Date Out: குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது தெரியுமா?! புது அப்டேட் கொடுத்த TNPSC
35
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Image Credit : ANI

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, 2026-ல் நடைபெறவுள்ள குரூப் 1 (Group I), குரூப் 2 (Group II), குரூப் 2ஏ (Group IIA) மற்றும் குரூப் 4 (Group IV) ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

45
எந்த சிலபஸ் படிக்க வேண்டும்?
Image Credit : Asianet News

எந்த சிலபஸ் படிக்க வேண்டும்?

டிசம்பர் 2024-ல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, பழைய பாடத்திட்டமா அல்லது புதியதா என்ற குழப்பம் தேவையில்லை.

55
இதை நம்பாதீங்க!
Image Credit : ANI

இதை நம்பாதீங்க!

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், வதந்திகளால் கவனத்தைச் சிதறவிடாமல் தேர்வுக்குத் தயாராகுறும் தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு எப்போதும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை மட்டுமே அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விளையாட்டுத் துறையில் சாதிக்க ஆசையா? தமிழக அரசின் பிரத்யேகப் பல்கலைக்கழகம் வழங்கும் 26 விதமான படிப்புகள் - முழு விபரம்
Recommended image2
வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசையா? பாஸ்போர்ட் எடுக்கும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க - தமிழக அரசு எச்சரிக்கை!
Recommended image3
எதிர்பார்த்தது ஒன்னு.. நடந்தது ஒன்னு! எஸ்.ஐ தேர்வில் பெரிய ஏமாற்றம்.. புலம்பித் தள்ளிய தேர்வர்கள்!
Related Stories
Recommended image1
TNPSC Group 2 ரிசல்ட் வெளியீடு! மெயின் தேர்வில் அதிரடி மாற்றம்! தேர்வர்கள் கவனத்திற்கு!
Recommended image2
Govt Exams Date Out: குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது தெரியுமா?! புது அப்டேட் கொடுத்த TNPSC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved