- Home
- Career
- Job Alert: வேலைக்கு அழைக்கிறது டிசிஎஸ்.! சென்னையில் "Walk In", மறந்துடாதீங்க.! மறந்தும் இருந்துடாதீங்க.!
Job Alert: வேலைக்கு அழைக்கிறது டிசிஎஸ்.! சென்னையில் "Walk In", மறந்துடாதீங்க.! மறந்தும் இருந்துடாதீங்க.!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், Walk-In Interview அறிவித்துள்ளது. 5 முதல் 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெறும் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம்.

நல்ல வாய்ப்பு, பயன்படுத்திக்கோங்க
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து விரிவடைந்து வரும் டிசிஎஸ், தற்போது Appian Developer பணிக்கு அனுபவமுள்ள நிபுணர்களை தேர்வு செய்ய Walk-In Interview அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் தொழில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் மற்றும் தொழில் நுட்ப திறன்களை வைத்து மட்டும் அல்லாமல், நிறுவனத்தின் உயர் தர பணிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட முடியும் என நிரூபிக்கும் நபர்களுக்கே அதிக வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இண்டர்வியூ தேதி இதுதான்
இண்டர்வியூ நவம்பர் 22ம் தேதி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரடியாக நடைபெற உள்ளது. இந்த Walk-In Interview TCS Office, SNR Kumaran Nagar, Sholinganallur, OMR, Chennai – 600019 முகவரியில் நடைபெறுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களும், அனுபவ விவரங்களும், புதுப்பிக்கப்பட்ட Resume-உம் எடுத்துக்கொண்டு நேரில் சென்று பங்கேற்கலாம்.
Walk-In Interview வில் கலந்து கொள்ளுங்கள்
சம்பளம் குறித்து அறிவிப்பில் சரியான விவரம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், விண்ணப்பதாரர்களின் திறமை, அனுபவம் மற்றும் பேச்சுவார்த்தையின் இறுதி கட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். டாடா குழுமத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படும் TCS-ல் பணிபுரிவது, ஐடி துறையில் நிலையான வேலை, வளர்ச்சி வாய்ப்பு, வல்லுநர் சூழல் மற்றும் சர்வதேச திட்ட அனுபவங்களைப் பெறும் வாய்ப்புகளை உருவாக்கும். ஆகவே, தகுதி உள்ளவர்கள் இதை தவற விடாமல் உடனே தயார் செய்து, Walk-In Interview வில் கலந்து கொள்ளுங்கள். இந்த வாய்ப்பு உங்கள் கரியர் டர்னிங் பாயிண்ட் ஆகலாம்!

