- Home
- Business
- Business: பெண்களே, புதுசா தொழில் தொடங்க போறீங்களா?! உங்களால் உங்க கிராமமே முன்னேறப்போகுது.! எப்படி தெரியுமா.?
Business: பெண்களே, புதுசா தொழில் தொடங்க போறீங்களா?! உங்களால் உங்க கிராமமே முன்னேறப்போகுது.! எப்படி தெரியுமா.?
தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் 'கிராமந்தோறும் புதுத் தொழில்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகள் வழங்கப்படும்.

அரசே நேரடியாக களம் இறங்குது
தமிழக அரசு இன்னும் ஒரு பெரிய மாற்றத்தை ஆரம்பிச்சிருக்கு! கிராமந்தோறும் புதுத் தொழில் என்கிற புதிய திட்டம் மூலமாக, நகர மையங்களிலேயே அடைந்திருந்த ஸ்டார்ட்அப் வளர்ச்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல முயற்சி தொடங்கியிருக்காங்க. கிராமத்துல இருக்கிற திறமை, அறிவு, ஆர்வம் எல்லாம் இருக்கும், ஆனால் சரியான ஆலோசனை, முதலீடு, வழிகாட்டல் இல்லாததால் எத்தனை கனவுகள் நடுவே நிற்குது? அதையெல்லாம் தகர்த்தெறக்க அரசே நேரடியாக களம் இறங்கிடுச்சி! இதற்காகவே கிராமங்கள் தோறும் புத்தொழில் திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் அதிரடியாக தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, 100 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
பெண்களே உங்க யோசனை கண்டிப்பா ஜெயிக்கும்
இத்திட்டத்துல முதல் கட்டமாக முழு மாநிலத்திலிருந்து 100 கிராமங்கள் தேர்வு செய்யப்படப் போகுது. முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த தேர்வு அரசால் நேரடியாக நடத்தப்படும்.மாவட்ட அதிகாரிகள் வழியாக முன்னுரிமை கொடுக்கப்படாது. யாருக்கெல்லாம் உண்மையிலேயே ஜொலிக்கும் ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் இருக்குகிறதோ, அவர்களுடைய யோசனையின் தரம் அடிப்படையில்தான் கிராமங்கள் தேர்வு செய்யப்படும்.
மற்றொரு சுவாரஸ்யமான அம்சம்
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் போன்ற சமூகத்தால் பின்தங்கிய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் வாய்ப்பு என்பது சிலருக்குக் கிடைக்கிற சலுகை இல்ல, அது எல்லோருக்கும் திறந்த மேடை!
தேர்வு செய்யப்பட்ட கிராமத்திலிருந்து தேர்வான ஒருவருக்கு அரசு தரும் உகநிபட்டியல் இதோ:
- ஸ்டார்ட்அப் பதிவு உதவி – மத்திய தொழில் & வர்த்தக அமைச்சகத்திடம் அதிகாரப்பூர்வ பதிவு
- தொடக்க முதலீடு – ₹1,00,000 வரை உதவி
- முதலீட்டு நிதி – ஆண்களுக்கு ₹10 லட்சம், பெண்களுக்கு ₹15 லட்சம்
- சந்தை வாய்ப்பு, முதலீட்டாளர் இணைப்பு, வியாபார வளர்ச்சி வழிகாட்டல்
இப்போ பலர் கேட்கலாம், கிராமத்துல எப்படி?"
இப்போ பலர் கேட்கலாம், நகரத்துல தான் சூப்பர் ஸ்டார்ட்அப் வருது, கிராமத்துல எப்படின்னு?.ஆபிஸ் கட்டிடம், வசதி, நெட்வொர்க், டெக் ஸபோர்ட் எல்லாம் இப்போ இணையம், ஸ்மார்ட்போன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலமா கிராமத்திலேயே கிடைக்குது. யாராலும், எந்த இடத்திலிருந்தும் உலகத்துக்கு வியாபாரம் செய்ற காலம் இது. அரசாங்கம் சொந்தமாக நிதியுதவி, வழிகாட்டலோடு கைகொடுக்கும் போது இன்னும் பெரிய விதத்தில் கிராமப் பொருளாதாரம் முளைக்கப்போகுது.
இதெல்லாம் சாதாரண திட்டம் இல்ல… உங்களோட ஒரு ஐடியா உங்கள் கிராமத்தையே முன்னேற வைக்கப் போகும் புரட்சி!
பண்ணவே வேண்டியது என்ன?
உங்களிடம் தொழில் செய்ய ஆசை இருந்தா, அதை வைத்தே விடாதீங்க! அதை பதிவு செய்து, இந்த திட்டத்துக்கான வாய்ப்பை பயன்படுத்துங்க. நகரம் வளர்ந்தது போல, அடுத்த ஸ்டார்ட்அப் அலை கிராமத்திலிருந்து வர நேரம் வந்துடுச்சு!

