எழுத்து தேர்வு இல்லை: பொதுப்பணித்துறையில் 760 காலியிடம் - உடனே அப்ளை பண்ணுங்க
தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 760 பணியிடங்கள நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TN Job Offer
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 760 பணியிடங்களை நிரப்புவதற்கான அத்தலான அறவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. பணிகளுக்கு தொடர்பான கல்வி உள்ளிட்ட தகுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வம் உள்ள தகுதியானவர்கள் 31/12/2024க்குள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job Offer
பொறியியல் பட்டதாரிகளுக்கான விண்ணப்பங்கள்
சிவில் இன்ஜினீயரிங் - 460, எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் - 28, ஆர்க்கிடெக்சர் - 12 என மொத்தம் 500 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவில் தேர்வு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்.
TN Job Offer
டெக்னீசியன்
சிவில் இன்ஜினீயரிங் - 150, எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் - 5, ஆர்க்கிடெக்சர் - 5 என மொத்தம் 160 பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவில் தேர்வு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.
TN Job Offer
பொறியியல் அல்லாத பணியிடங்கள்
பொறியியல், டிப்ளமோ அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 100 இடங்கள் காலியாக உள்ள நிலையில், B.A., B.Sc., B.Com., BBA, BCA, BBM என ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் தகுதி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job Offer
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்ளுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது என்பதால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வு மூலம் மட்மே ஆள் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.