MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • கூட்டுறவு சங்கத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை.! தேர்வர்களுக்கு எதிர்பாரா சூப்பரான அறிவிப்பு

கூட்டுறவு சங்கத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை.! தேர்வர்களுக்கு எதிர்பாரா சூப்பரான அறிவிப்பு

சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.09.2025 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 28 2025, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2025 முதல் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : stockPhoto

தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் 38 மாவட்டங்களில் 2513 (சென்னை மாவட்டம் 377) தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

 இத்தேர்விற்கு தயாராகும் சென்னை மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் 01.09.2025 முதல் துவங்கப்படவுள்ளது.

33
Image Credit : our own

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களுடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்புக் கொள்ளவும்,

மேலும், விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
Recommended image2
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்
Recommended image3
TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?
Related Stories
Recommended image1
அடேங்கப்பா.! ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை.! அசத்தலான அறிவிப்பு- இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க
Recommended image2
செப்டம்பரில் மட்டும் 11 நாள் விடுமுறையா.!! பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved