- Home
- Career
- அடேங்கப்பா.! ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை.! அசத்தலான அறிவிப்பு- இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க
அடேங்கப்பா.! ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை.! அசத்தலான அறிவிப்பு- இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க
ஆகஸ்ட் 30 அன்று பிரமாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில் 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்நிறுவனங்களை தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வேலைவாய்ப்பு ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் பரவலாக உருவாகி வருகிறது. அந்த வகையில் மாவட்டதோறும் தனியார் துறை வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு
இந்த நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பை நடத்துகிறது.
நாள்: 30.08.2025, சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை
இடம்: லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பெண்ணாடம்
20ஆயிரம் பேருக்கு வேலை
150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்
20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய வழிகாட்டுதல்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள @ https://www.tnprivatejobs.tn.gov.in @candidate login-User ID, Password தங்களது கைபேசிக்கு வரும் OTP ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும். மீண்டும் User ID. Password-ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளவும்
கல்வி தகுதி என்ன.?
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு (Bio Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்
கல்வித் தகுதிகள்
8/10/12-வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /../DIT/B.E/B.Tech
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர் : 04142-290039, 9499055908
திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கடலூர் : 9444094260, 9444094261
மாவட்ட ஆட்சியர், கடலூர்