MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • படித்து முடித்தவுடன் வேலை! மாணவர்களுக்கு இலவச பயிற்சி! ஒரு பைசா கூட வேண்டாம்! முழு விவரம்!

படித்து முடித்தவுடன் வேலை! மாணவர்களுக்கு இலவச பயிற்சி! ஒரு பைசா கூட வேண்டாம்! முழு விவரம்!

படித்து முடித்தவுடன் வேலை பெறும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Aug 28 2025, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Govt Free Coaching for SC, ST, OBC & Minority Students
Image Credit : social media

Govt Free Coaching for SC, ST, OBC & Minority Students

அந்த காலத்திலும் இந்த காலத்திலும் கல்வி தான் உலகின் ராஜாவாக இருந்து வருகிறது. கல்வி என்னும் அழியாத செல்வத்தை பெற்று விட்டால் பணம், பதவி, கெளரவம் என அனைத்தும் தேடி வரும். இதனால் தான் வறுமை காரணமாக படிக்க முடியாத மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச கல்வி வழங்கி வருகிறது.

24
இலவச பயிற்சி வழங்கும் மத்திய அரசு
Image Credit : social media

இலவச பயிற்சி வழங்கும் மத்திய அரசு

இதேபோல் ஏழை, எளிய மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் சூப்பர் திட்டத்த்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது SC (பட்டியலிடப்பட்ட சாதி), ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்), OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) (கிரீமி லேயர் அல்லாதோர்), மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கான பயிற்சியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது.

என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்?

Coaching Schemes For Sc/st/obc (non-creamy Layer) & Minority Students For Universities என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதுகலை படிப்பு தொடர்பான பயிற்சிகள், போட்டித் தேர்வு தொடர்பாக பயிற்சிகள், நெட் தேர்வு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

Related Articles

Related image1
கூட்டுறவு சங்கத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை.! தேர்வர்களுக்கு எதிர்பாரா சூப்பரான அறிவிப்பு
Related image2
அடேங்கப்பா.! ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை.! அசத்தலான அறிவிப்பு- இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க
34
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : Getty

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரை சந்தித்து இந்த திட்டத்துக்குரிய விண்ணப்பங்களை பெற்று அதை சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின்போது ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொடுக்க வேண்டும். பின்பு அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

புத்தகங்கள் கம்யூட்டர்கள் வழங்கப்படும்

இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதாவது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான புத்தகங்கள், பத்திரிகைகள், கற்பித்தல்/கற்றல் உதவி பொருள், கம்ப்யூட்டர்கள், போட்டோகாப்பியர், ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் ஆகியவை வாங்குவதற்காக இந்த திட்டத்துக்காக அதிகப்பட்சம் ரூ.7 லட்சம் வரை சம்பந்தபட்ட கல்லுரிகள்,பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு வழங்கும்.

44
அனுபவ ஆசிரியர்கள் மூலம் பயிற்சி
Image Credit : Getty

அனுபவ ஆசிரியர்கள் மூலம் பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும் மத்திய அரசே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி தொடர்பான ஆலோனைகள், படித்து முடித்து விட்டு என்னென்ன வேலையில் சேரலாம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்படி வெற்றி பெறுவது, ஆங்கிலம் குறித்த சந்தேகங்கள், அடுத்து என்ன படிக்கலாம்? என்பது தொடர்பான ஆலோசனைகளும், பயிற்சியும் இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி மாணவர்
பள்ளி
மத்திய அரசு
வேலைவாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved