Pay Commission: 7வது vs 8வது சம்பள கமிஷன் - DA, சம்பளம், பென்ஷன்... என்னென்ன மாறும்?
7வது மற்றும் 8வது சம்பள கமிஷனுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன? ஃபிட்மென்ட் ஃபாக்டர், அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA), HRA முதல் அமல்படுத்தப்படும் காலம் வரை முழுமையான ஒப்பீடு இதோ.

அமைப்பு மற்றும் அறிக்கை சமர்ப்பிப்பு
யார் தலைமையில் கமிஷன்கள்?
சம்பள உயர்வுக்கு ரெஃபரன்ஸ் தேதி
சம்பளத்தை தீர்மானிக்கும் ஃபிட்மென்ட்
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்
7வது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. 8வது சம்பள கமிஷனில், இறுதி செய்யப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பொறுத்து, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.34,560 முதல் ரூ.51,480 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்- 8th Pay Commission: கன்சல்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! முழு விவரம் உள்ளே
அகவிலைப்படி (DA) கணக்கீடு
7வது சம்பள கமிஷன் கட்டமைப்பின்படி, அகவிலைப்படி (DA) தற்போது 60% ஐ எட்டியுள்ளது. 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும்போது, DA பூஜ்ஜியமாக மாற்றப்பட்டு, பழைய DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்-8th Pay Commission: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.45,000? 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்!
வீட்டு வாடகைப்படி (HRA) எப்படி?
7வது சம்பள கமிஷனில் DA 50% ஐத் தாண்டியதால், X, Y, Z நகரங்களில் HRA தற்போது முறையே 30%, 20%, 10% ஆக உள்ளது. 8வது சம்பள கமிஷனில், DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்ட பிறகு, HRA புதிதாகக் கணக்கிடப்படும். இதையும் கிளிக் செய்து பாருங்களேன்- 8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் செய்யப்போகும் மாயம்?! சம்பளம், பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும்? முழு விவரம்
புதிய பென்ஷன் திட்டம் (UPS)
7வது சம்பள கமிஷனில், 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு என்பிஎஸ் (NPS) திட்டம் முக்கியத்துவம் பெற்றது. 8வது சம்பள கமிஷனில், மத்திய அரசு அறிவித்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மற்றும் என்பிஎஸ்-இல் தேவையான சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்-8th Pay Commission: முழு அட்டவணை வெளியீடு! எந்தெந்த நகரங்களில் மீட்டிங் நடக்குது தெரியுமா?
எப்போது அமலுக்கு வரும்?
7வது சம்பள கமிஷன் 2016-லேயே அமல்படுத்தப்பட்டது. 8வது சம்பள கமிஷன் தற்போது ஆலோசனைக் கட்டத்தில் உள்ளது. இறுதிப் பரிந்துரைகள் 2026-27-ல் வரலாம். எனவே, 2027-க்கு முன்பு இது அமலுக்கு வருவது சாத்தியமில்லை. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்- Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.! உடனே அப்ளை பண்ணுங்க.!
யாரெல்லாம் பயனடைவார்கள்?
7வது சம்பள கமிஷன் சுமார் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்குப் பலனளித்தது. 8வது சம்பள கமிஷன் மூலம் சுமார் 48.62 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.85 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் கிளிக் செய்து பாருங்களேன்- Gold Loan: தொழில் தொடங்க உதவும் நகைக்கடன்.! கட்டு கட்டா பணம் பெற எளிய வழிமுறைகள்!

