Job: பழனி முருகன் கோயிலில் வேலை; தமிழ் தெரிந்தால் போதும்; 296 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?
பழனி முருகன் கோயிலில் 296 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Palani murugan temple
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை புரிகின்றனர். இந்நிலையில், பழனி கோயிலில் உள்ள 296 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இந்த கோயிலின் உள்துறை, வெளித்துறை, ஆசிரியர்,தொழில்நுட்ப பிரிவு என பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அது குறித்த விவரங்களை பின்வருமாறு காண்போம்.
Jobs in Palani Murugan Temple
வெளித்துறை பணியிடங்கள்:
* இளநிலை உதவியாளர் பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
* சீட்டு விற்பனையாளர் பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
* சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்) பணிக்கு 2 காலியிடங்கள். தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
* சத்திரம் காப்பாளர் பணிக்கு 16 காலியிடங்கள். 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
* துப்புரவு பணியாளர் (உபகோயில் மற்றும் உபநிறுவனங்கள்) பணிக்கு 104 காலியிடங்கள். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) பணிக்கு 57 காலியிடங்கள். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* மலைக்கோயில், உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்களின் காவல் பணிக்கு 46 காலியிடங்கள் உள்ளன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* கால்நடை பராமரிப்பு பணிக்கு 2 பணியிடங்களும், உதவி யானை மாவுத்தர் (உபகோயில்)பணிக்கு 1 காலியிடமும் உள்ளன. இந்த பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு: ரூ. 60,000 வரை சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!
Tamilnadu Goverment job
தொழில்நுட்ப பணியிடங்கள்
இதேபோல் பழனி கோயிலின் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு மேற்பார்வையாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வின்ச் ஆப்ரேட்டர, ஹெல்பர், எச்.டி. ஆப்ரேட்டர் என மொத்தம் 30 காலியிடங்கள் உள்ளன. இதில் உதவி பொறியாளர் பணிக்கு என் ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இளநிலை பொறியாளர், மேற்பாரையாளர், தொழில்நுட்ப உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோவும்,வின்ச் ஆப்ரேட்டர், மிசின் ஆப்ரேட்டர், ஹெல்பர், H.T ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளுக்கு ஐடிஐயும் முடித்திருக்க வேண்டும்.
உள்துறை பணியிடங்கள்
இந்த பிரிவில் அத்யானப்பட்டர் (மலைகோயில்), மாலைகட்டி பணிகளுக்கு தலா ஒருவரும், அரச்சகர் (உபகோயில், நாதஸ்வரம் (உபயோயில், தவில் (உபகோயில்) ஆகிய பணிகளுக்கு தலா 2 பேரும், தாளம் (உபகோயில்) பணிக்கு 5 பேரும் என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஆகம ஆசிரியர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்த 13 பதவிகளுக்கும் தமிழில் எழுத படிக்க தெரியவும், அந்த பிரிவிக்கான சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
Tamilnadu Jobs
சம்பளம், வயது வரம்பு
மேற்கூறியபடி மேற்கண்ட பணியிடங்கள் உள்பட மொத்தம் 296 காலிப்பணியிடங்களுக்கு நேரடியாக தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் 18 வயது நிரம்பியவராகவும், 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு பதவியை பொறுத்து ரூ.11,600 முதல் தொடங்கி ரூ.1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
டிஎன்பிஎல் வேலைவாய்ப்பு 2024 ; விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
Palani Temple
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் https://palanimurugan.hrce.tn.gov.in/ அல்லது https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளம் சென்று விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624 601. திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பழனி முருகன் கோயிலில் 296 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.