சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு: ரூ. 60,000 வரை சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை ஐஐடியில் ஜூனியர் அசோசியேட், பிராஜக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை ஐஐடியில் ஏற்படும் காலியிடங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட், பிராஜக்ட் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் கொண்ட நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, M.Sc, MA படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பதற்கான விண்ணப்பஆட்சேர்ப்பு 04.12.2024 முதல் தொடங்கியது. 13-12-2024 வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
job opportunities: ரூ.1,20,000 வரை சம்பளம்! இன்ஜினியரிங் பட்டதாரி சூப்பர் வேலை வாய்ப்பு!
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் சென்னை ஐஐடியில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதிக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு பாஸ் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - உடனே அப்ளை பண்ணுங்க
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுவதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.