MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • உங்ககிட்ட பழைய 50 ரூபாய் நோட்டு இருக்கா? ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம்!

உங்ககிட்ட பழைய 50 ரூபாய் நோட்டு இருக்கா? ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம்!

சீரியல் நம்பர் 786 கொண்ட பழைய 50 ரூபாய் நோட்டுகள் ஆன்லைன் சந்தையில் அதிக மதிப்புடையவை. இந்த நோட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கி இதுபோன்ற விற்பனைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 22 2024, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் அதே நேரம் பழைய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களுக்கான ஆன்லைன் சந்தைகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் அரிய மற்றும் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பழைய மற்றும் அரிய வகை ரூபாய் நோட்டு மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று சமூக வலைதளங்கள் தகவல் பரவி வருகின்றன. 

25
How to sell old currency

How to sell old currency

உதாரணமாக பழைய 10 ரூபாய் நோட்டுக்கு ஆன்லைன் சந்தையில் அதிக டிமாண்ட் உள்ளது. பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரின் ஜீரோ அதிகமாக இருந்தால் அதற்கு மதிப்பு அதிகம். இந்த பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Coin Bazzar, Quikr போன்ற இணையதளங்களி பழைய ரூபாய் நோட்டுகளை விற்று லாபம் ஈட்ட முடியும் சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாதம் ரூ.5000 சேமித்தால் ரூ.50 லட்சம் கிடைக்கும்! லாபத்தை அள்ளித் தரும் SIP முதலீடு!

35

அந்த வகையில் தற்போது மற்றொரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால், ரூ.25 லட்சம் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்த பழைய 50 ரூபாய் நோட்டுக்கு அதிக தேவை இருப்பதால், அதனை ஆன்லைன் விற்றால் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணம் சம்பாதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு ஒரு கண்டிஷனும் இருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் பழைய 50 ரூபாய் நோட்டில் சீரியல் 786 என்று இருக்க வேண்டும். நோட்டின் முன்பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும் அவசியம் இருக்க வேண்டும். இந்த பழைய 50 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்களில் லட்சங்களில் சம்பாதிக்கலாம். சர்வதேச சந்தையில் 50 ரூபாய் நோட்டுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த ரூபாய் நோட்டுக்கு அதிக பணம் கொடுக்கப்படுகிறது.

45

முஸ்லீம் சமூகத்தில், வரிசை எண் 786 மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. மகிழ்ச்சியையும் செழிப்பையும் பராமரிக்க, சந்தையில் இந்த நோட்டை வாங்க பலரும் விரும்புகின்றனர். இந்த நோட்டை விற்க Quikr இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் உங்களிடம் இருக்கும் பழைய 50 ரூபாய் நோட்டை தெளிவாக புகைப்படம் எடுத்து, அதை அந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த 50 ரூபாய் நோட்டு விளம்பரத்தை பார்ப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். 

 

55

ஆனால் ஆன்லைனில் நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எந்த பழைய ரூபாய் நோட்டுகளையோ அல்லது நாணயங்களையோ விற்கவோ வாங்கவோ ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை. எனவே, கவனமாக சிந்தித்த பின்னரே நோட்டை விற்க வேண்டும். முழு கவனத்துடன் தகவல்களைச் சேகரித்த பின்னரே நோட்டை விற்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மோடி அரசு வழங்கும் வட்டியில்லா லட்சக்கணக்கான ரூபாய் கடன்.. பெறுவது எப்படி?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image2
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Recommended image3
பணம் போட்டா காசு, எடுத்தா காசு. பணம் இல்லேனாலும் காசு..! இலவசம்னு சொல்லி கொள்ளை அடிக்கும் வங்கிகள்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved