- Home
- Business
- Investment: வெள்ளி இருக்கும் போது தங்கம் எதுக்கு.! அள்ளி கொடுக்க போகும் வெள்ளியை இனி தள்ளி வைக்க வேண்டாம்.!
Investment: வெள்ளி இருக்கும் போது தங்கம் எதுக்கு.! அள்ளி கொடுக்க போகும் வெள்ளியை இனி தள்ளி வைக்க வேண்டாம்.!
தங்கம் விலை உயர்வால், வெள்ளி ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. குறைந்த விலையில் வாங்க முடிவதாலும், மின் சாதனங்கள் மற்றும் சூரிய ஆற்றல் போன்ற துறைகளில் தேவை அதிகரிப்பதாலும், வெள்ளியின் மதிப்பு எதிர்காலத்தில் உயர வாய்ப்புள்ளது.

காலம் மாறிபோச்சி முதலீடும்தான்
பலரும் முதலீடு என்றாலே முதலில் தங்கத்தையே நினைப்பார்கள். ஆனால், இப்போது காலம் மாறி வருகிறது. தங்கம் விலையுயர்ந்து போனதால், சாதாரண மக்களுக்கு அதை வாங்குவது கடினமாகி விட்டது. இதற்கிடையில் அமைதியாக விலை ஏறிக் கொண்டிருப்பது வெள்ளி தான். ஒருகாலத்தில் பெரும்பாலோர் அலங்காரத்திற்காகவே பயன்படுத்திய இந்த வெள்ளி, இன்று சிறந்த முதலீட்டுக் கருவியாக மாறி வருகிறது.
பெரிய சேமிப்பாக மாறும் வெள்ளி
வெள்ளி தங்கத்தைப் போல லட்சக்கணக்கில் விலை இல்லாமல், சிறு தொகையிலேயே வாங்கி சேமிக்க முடியும். இன்று ஒரு கிலோ வெள்ளி விலை, ஒரு கிராம் தங்க விலைக்கும் ஒப்பிடும்போது மிகக் குறைவு. அதனால் உங்கள் மாத வருமானத்தில் சிறிய தொகையையே பிரித்து வைத்தாலும், சில மாதங்களில் நல்ல அளவில் வெள்ளி சேமிக்க முடியும்.
எதிர்காலத்தில் வெள்ளி தேவை மேலும் உயரு
வெள்ளி பயன்பாடு தங்கத்தைவிட பல மடங்கு அதிகம். மின் சாதனங்கள், சூரிய ஆற்றல் பலகைகள், மருத்துவ சாதனங்கள், கார் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல துறைகளில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் எதிர்காலத்தில் அதன் தேவை மேலும் உயரும். தேவை அதிகரித்தால் விலையும் நிச்சயமாக உயர்ந்தே தீரும். இதே வேளையில், வெள்ளி விலையும் உலக சந்தையுடன் நேரடியாக தொடர்புடையது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார மாற்றங்கள், வெள்ளி விலைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெள்ளியை வாங்குவதும் விற்பதும் சுலபம்
முக்கியமாக, வெள்ளியை வாங்குவதும் விற்பதும் சுலபம். நாணயம், நகை, வெள்ளி தட்டுகள் அல்லது டிஜிட்டல் வடிவில் வாங்கலாம். சில வங்கிகள் மற்றும் ஆன்லைன் ப்ளாட்பார்ம்களிலும் கூட வெள்ளி முதலீடு செய்யும் வசதி உள்ளது. ஒரு சிறிய விலை வீழ்ச்சியும் கூட, நீண்டகாலத்தில் உங்களுக்கு நன்மை அளிக்கும்.
காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
தங்கம் வாங்க முடியாமல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளி போன்ற சுருக்கிய முதலீட்டில் தொடங்குங்கள். நாளை அதுவே உங்களுக்கு பெரிய சொத்து ஆக மாறும்.
வெள்ளியை இனி தள்ளி வைக்க வேண்டாம்
அள்ளி கொடுக்க போகும் வெள்ளியை இனி தள்ளி வைக்க வேண்டாம். இன்று முதல் சிறு அளவில் முதலீடு செய்து எதிர்காலத்தை பாதுகாக்குங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

