எது மலிவு, எது விலை உயர்வு? GST 2.0 இன்று முதல்.. முழு ஜிஎஸ்டி பட்டியல்
இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்து, வரி விதிப்புகளை 5% மற்றும் 18% என எளிமையாக்கியுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பல சேவைகளுக்கு முழு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

மலிவு பொருட்கள்
இந்தியாவில் இன்று முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST 2.0) நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல பொருட்கள் மலிவாகவும், சில பொருட்கள் அதிக விலையிலும் கிடைக்கப் போகின்றன. செப்டம்பரில் GST கவுன்சில் ஒப்புதல் அளித்த இந்த மாற்றம் இன்று முதல் சந்தையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இனி இரண்டு வரி மட்டுமே
முந்தைய காலத்தில் 5%, 12%, 18%, 28% என பல ஜிஎஸ்டி வரிசைகள் இருந்தன. இது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் குழப்பமாக இருந்தது. இப்போது அரசு அதை எளிமையாக்கியுள்ளது. இனி இரண்டு வரி மட்டுமே – 5% மற்றும் 18%. அதேசமயம், புகை, மதுபானம், பான் மசாலா போன்ற ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% ‘சின் டாக்ஸ்’ விதிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
வரி இல்லாத பொருட்கள்
முற்றிலும் வரி நீக்கப்பட்டவை
- பனீர், சென்னா (பேக் செய்யப்பட்டவை)
- UHT பால்
- பீட்சா பிரெட், காக்ரா
- சப்பாத்தி, பரோட்டா, குல்சா போன்ற பாரம்பரிய ரொட்டிகள்
- மருத்துவ உபகரணங்கள், 33 உயிர் காப்பு மருந்துகள்
- காப்பி, நோட்டுப் புத்தகம், பென்சில், ஈரேசர் போன்ற கல்விப் பொருட்கள்
- 12ஆம் வகுப்பு வரை தனியார் டியூஷன்/கோச்சிங் மையங்கள்
- தொழில் பயிற்சி, திறன் மேம்பாட்டு மையங்கள்
- சுகாதாரம், கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்கள்.
சாதாரண மக்களுக்கு நிம்மதி
மலிவாகும் பொருட்கள்
- சோப்பு, ஷாம்பு, பற்பசை, பிஸ்கெட், ஸ்நாக்ஸ், ஜூஸ், நெய் ஆகியவற்றுக்கு இப்போது 5% GST மட்டுமே.
- சலூன், ஸ்பா, ஜிம், யோகா போன்ற சேவைகளும் இனி 18%க்கு பதிலாக 5% மட்டும்.
- ஏ.சி., ஃபிரிட்ஜ், டிஷ்வாஷர், பெரிய டிவி போன்றவை 28%ல் இருந்து 18%க்கு குறைந்ததால் 7–8% வரை விலை குறையும்.
- சிமெண்ட் குறைந்த வரியில் வருவதால் வீடு கட்டும் செலவு குறையும்.
வாகனங்களுக்கு நிம்மதி
- 1200cc-க்கு குறைந்த சிறிய கார்கள் 28% இல் இருந்து 18% குறைந்துள்ளதால் விலை குறையும்.
- 350cc-க்கு குறைந்த பைக், ஸ்கூட்டர் விலை குறையும்.
விலை உயர்வு பொருட்கள்
இன்சூரன்ஸ் மலிவு
சுகாதார, உயிர் காப்பீட்டு பிரீமியம் 18% GST-இல் இருந்து 0% அல்லது குறைந்த விகிதத்தில். இதனால் காப்பீடு பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும்.
அதிக விலையானவை
- புகையிலை, பீடி, பான் மசாலா - 40% வரி.
- லக்சுரி கார்கள், SUV - 40% வரி.
- 350cc-க்கு மேற்பட்ட பைக் – அதிக வரி.
- சோடா, குளிர்பானங்கள் – விலை அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி 2.0 சாதாரண மக்களின் அன்றாட செலவுகளை குறைக்கும் விதமாகவும், ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.