MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Aadhar - Pan Linking : ஆதார் & பான் கார்டை இணைக்க கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு!

Aadhar - Pan Linking : ஆதார் & பான் கார்டை இணைக்க கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு!

ஆதார் எண்ணுடன் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவசாகம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது..ஒருவேளை இணைக்கத் தவறினால் உங்கள் 10 இலக்க பான் எண் செயலிழக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

2 Min read
Author : Dinesh TG
| Updated : Mar 28 2023, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நீண்ட நாள் கால அவகாசத்திற்குப் பிறகு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைத்தே ஆக வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நீலையில், மீண்டும் மேலும் 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை ஜூம் 30ம் தேதிக்குள் இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. 10 இலக்க பான் (நிரந்தர கணக்கு எண்) செயலிழந்துவிடும்.
 

24

இன்றே ஆதாருடன் பான்கார்டைஇணையுங்கள். அனைவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டும், தாமதிக்காதீர்கள்.

வருமானவரிச்சட்டத்தின்படி, விதிவிலக்குப்பட்டியலில் இருப்பவர்களைத் தவிர அனைவரும் ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க வேண்டும். 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதியாகும் இதை செய்யாவிட்டால், பான்கார்டு செயலிழந்துவிடும்”

ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமானவரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது.
 

34

எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எவ்வாறு

1. UIDPAN என டைப் செய்ய வேண்டும்.
2. UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
3. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்
4. குறுஞ்செய்தி அனுப்பியபின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்

Aadhar Card Pan Card Link: ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! எப்படி இணைப்பது தெரிந்து கொள்ளுங்கள்
 

44

ஆன்-லைனில் ஆதார்-பான் இணைப்பது எவ்வாறு

1. வருமானவரித்துறை இணையதளத்துக்கு செல்ல வேண்டும்

2. eportal.incometax.gov.in or incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3. உங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது ஆதார் எண் யுசர் ஐடியாகும்

4. திரையில் வரும் லிங்கை கிளிக் செய்தால், ஹோம்பேஜ்ஜுக்குச் செல்லும்

5. ஆதாருடன் பான் இணைப்பது என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

6. பான் எண் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து, ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

7. கேப்சா குறியீடுகளை டைப்செய்து உறுதி செய்ய வேண்டும்

8. ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட செய்தி கிடைக்கும்.

Pan Card Aadhar Card Link: பான் எண்-ஆதார் கார்டை இணைத்துவிடுங்கள்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
வருமான வரி
வருமான வரி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 1க்கு பிறகு சம்பளதாரர்களுக்கு ஆப்பு.. இந்த 14 முடிவுகள் உங்களை பாதிக்கும்.. உஷார்
Recommended image2
சிகரெட் விலை உச்சம்.. ஒரு சிகரெட்டுக்கு ரூ.8.50 உயர்வு.. அடேங்கப்பா! ஒரு பாக்கெட் இவ்வளவா?
Recommended image3
Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved